நா. பார்த்தசாரதி - 9.5 தான் சொல்லிய விஷயத்தில் பட்டுக்கொள்ளாமல் பிச்சாண்டியா பிள்ளை நழுவியதிலிருந்து அவரும் சர்ச்சைக். குப் பயப்படுகிறார் என்று புரிந்தது. - சுதர்சனம் ஊர்ச்சாவடிக்கு அருகே இருந்த பொது நூல்நிலையத்தில் போய்ச் சிறிது நேரம் படித்துக் கொண்டி ருந்துவிட்டு அப்புறம் வீட்டுக்குத் திரும்பினான். அவன் வீடு திரும்பியபோது இருட்டிவிட்டது. தெருவிளக்கடியில் வீட்டு வாசலில் அவனுக்குக் குடியிருக்க வீடு வாடகைக்கு விட்டி ருந்த கன்னையாப் பத்தர் நின்றுகொண்டிருந்தார். அவர் தன்னை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சுதர்சனன் அவரைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான். கதவைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு, உள்ளே வாங்க சார்! பாவம் ரொம்ப நாழியாக் காத்துக் கிட்டிருக்கீங்க போலிருக்கு...' என்று அவரை மிகவும். மரியாதையாக உள்ளே வரவேற்று உட்காரச் சொன்னான் சுதர்சனன். - பத்தர் தயங்கித் தயங்கி உள்ளே வந்து உட்கார்ந்தார். சுவர்களை உற்றுப் பார்த்தார். எந்தச் சுவரிலும் பிள்ளை யார் படமோ, முருகன் படமோ, வெங்கடாசலபதி படமோ எதுவும் தென்படவில்லை. சுவரின் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு மூன்று தாடிக்கார மனிதர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கார்ல் மார்க்ஸ், லெனின், பெரியார் ஈ.வெ.ரா படங்கள்தாம் அவை. அதில் பெரியார் படத்தை மட்டும்தான் பத்தருக்குப் புரிந்திருந்தது. மற்றப்படங்களை அவர் உற்று உற்றுப் பார்ப்பதைக் க்ண்டு சுதர்சனன் தானாக அவற்றைப் பற்றி விவரித்துச் சொல்லலானான். அவன் சொல்லி முடித்த பின் சில விநாடிகள் இடை வெளி விட்டதும் பத்தர் மெதுவாக ஆரம்பித்தார். "நீங்க தனிக் கட்டையாத்தானே இருக்கிங்க? உங்க. ளுக்கு எதுக்கு இத்தினிபெரிய வீடு: பஜார்லே எங்கேயாவது: ஒரு ரும் எடுத்துக்கிட்டாப் போதாதா?’’ - -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/97
Appearance