நா. பார்த்தசாரதி - 71.
வாழ்க்கை எப்படி இருக்கும்னுபார்க்காமலேயேசோஷலிஸம் அடித்தளத்து மக்களின் வாழ்க்கையை உயர்த்தறது. வறுமையை ஒழிக்கறது-அத்தனையும் பத்திப் பேசிட றாங்க. எனக்கு அது பிடிக்கலை." . . .
பதில் சொல்லாமல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள் மங்கா. தான் சுதந்திரமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் இயங்குகிறோம் என்பதைக் காட்ட அவளிடம்-கருத்து வேறுபடும் உரிமையும் தனக்கு உண்டு என்பதை உணர்த்த-அவன் தயாராயிருந்தான். ஆனால் அவள் அதற்கு அப்படித் தயாராயில்லை. சிரித்துச் சிரித்து மயக்கினாள். அவன் சொன்னபடி எல்லாம் கேட்டாள். - - . . . . . .
மனம் விட்டுப் பேசுவதற்குப் பதிலாகச் சிரித்து மழுப்பு கிறவர்களும், சிசிப்பதற்குப் பதில் பேசி மழுப்புகிறவர் களும் யோசிக்கப்பட வேண்டியவர்கள் என்பது முத்து ராமலிங்கத்தின் கணிப்பு. சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண் டிருக்கும்போது அவளிடமே அதைக் கேட்டு விட்டான். அவன். -
"...தெருவில் இறங்கி நடக்காமலே இந்த ஊர்லே அதிகம் பேர் அடித்தளம் அது இதுன்னு பேசறாங் கன்னேனே, அப்ப நீ சிகிச் சதுக்கு என்ன அர்த்தம்?"
சும்மா சிரிச்சேன் அவ்வளவுதான்-இதுக்கெல்லாம் அர்த்தம் பார்த்துக்கிட்டிருந்தா எப்படி?” ... " -
"அர்த்தமில்லாமேயோ சும்மாவே எதையும் செய்யறது எனக்குப் பிடிக்காது. உங்கப்பா அரசியல் நடத்தற மாதிரி தான் உன்னோட சிரிப்பும் இருக்கு...' - . இப்போது இதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்தாள். தன் தந்தையைப் பற்றிய அவனது தீவிரமான விமரிசனத்தை அவள் கண்டிக்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை. . . . . . .
"நீங்க என்னிக்கி மதுரை திரும்பப் போறிங்க?"