நா. பார்த்தசாரதி 189:
யான மந்திரியிடமிருந்து ஆபத்துக்களும், எதிர்ப்புக்களும் நிறைய இருக்குமென்று முத்துராமலிங்கத்துக்கும் மற்றவர் களுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது, ஆபத்துக்கோ அபாயத்துக்கோ பயந்து, அடைக்கலம் புகுந்து வந்தவளை கைவிடுவதற்கும் அவர்கள் தயாராயில்லை.
தான் தந்தைக்கு எதிராகப் புறப்பட்டு வந்து அவர்க ளோடு சேர்ந்து கொண்டால்தான் அவர்களுக்கு இத்தனை தொல்லைகள் என்பதை மங்காவே மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள். முதலிலேயே இதை எதிர்பார்த்து அதுமானித்த சிவகாமிநாதனின் தீர்க்கதரிசனத்தை இப்போது அவள் வியந்தாள், . . .
சண்முகம் இரண்டு மூன்று நாட்கள் சிந்தாதிரிப் பேட்டையில் முத்துராமலிங்கத்தோடு தங்கினானாயினும் வெளியிலே ஹோட்டலிலே போய்த்தான் சாப்பிட்டு விட்டு வந்தார். வீட்டிலேயே சாப்பிட அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. முத்துராமலிங்கத்துக்கு அவர் ஆறுதல் சொன்னார்: - . •: .
"சினிமாவிலே வேலை போயிரிச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். என்னைப் போலொத்தவன் எதோ தாமரை எலைத் தண்ணி மாதிரி அங்கே இருந்துக்கிட்டிருக்கேன். -உனக்கு இந்த ஃபீல்டு ஒத்துக்காதுன்னு நீ சேர்ந்தப்பவே நான் நினைச்சேன். தேனா இனிக்கிற சொளை உள்ளே இருந்தாலும் பலாப் பழத்தைப் பிரிச்சதும் சாக்கடைக்கு அடியிலேருந்து வர்ரமாதிரி அடிக்குமே ஒரு துர்வாடை. அதுபோல இந்த ஃபீல்டோட கவர்ச்சியிலிருந்து பிரித்து எடுக்க முடியாதபடி பொய், வஞ்சகம், ஏமாற்று, வேஷம், ஒழுக்கக் குறைவு, நாணயமின்மை, குழி பறிக்கிறது. எல்லாம் சேர்ந்து நாத்தமடிக்கும். உன்னாலே இந்த நாத்தத்துலே காலந்தள்ள முடியாது.
'பாபுராஜ் எனக்குச் சீட்டுக் கிழிச்சதுக்காக நான் கொஞ்சங்க்ட வருத்தப்படலே. ஊருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். இனிமே அதை அனுப்ப