19 0. - - நிசப்த சங்கீதம்
வழியில்லே! வேற வேலை கெடச்சுக் கையிலே மிஞ்சினாத் தான் அனுப்பலாம்.' -
"வேற வேலை கெடைக்கிறவ்ரை நான் வேணும்னாப் பணம் தரேன். ஊருக்கு அனுப்பு. கெடைச்சதும் திருப்பிக் குடு. போறும். அனுப்பிக்கிட்டிருந்ததைத் திடீர்னு நிறுத்துவானேன்?' - -
"நான் செய்கிறேன். நான் இருக்கிறேன் என்னால் தான் முடியும் என்பதுபோலெல்லாம் முனைப்போ செருக்கோ தெரியாமல் சகஜமாகவும், இயல்பாகவும் சண்முகம் தனக்கு உதவிகள் செய்ய முன்வருவதை நினைத்து முத்துராமலிங்கம் உள்ளுர வியந்தான். அப்படி உதவ முன்வருகிறவர்கள் இன்றைய சமூக அமைப்பில் மிக மிகக் குறைவாகவ்ே தென்பட்டதுதான் காரணம். மறு நாளே டாக்டரின் முயற்சியால் சிவகாமிநாதன் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்துவிட்டார். ஏற்கெனவே மங்காவும், முத்துராமலிங்கமும் மற்றவர்களும் நிறைவேற்றி வைத்திருந்ததால் "தியாகியின் குரல் தாமதமின்றி வெளி வந்தது. சிறையில் அதிக நாட்கள் வைத்தால் அது அவருக்குப் புகழ் தேடித்தரும் என்று கருதியோ என்னவோ தான் இரண்டொரு நாட்களில் சிவகாமிநாதனையும் அவர்கள் விடுதலை செய்துவிட்டிருந்தார்கள். -
சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினார்களோ, அதே இடத்தில் மந்திரி எஸ். கே. சி. நாதனின் கட்சியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. மந்திரிக்கு அடுத்தபடி இருந்த பேச்சாளர்கள் பட்டியலில் கலையரசி கண்மணியின் பெயரும் காணப்பட்டது. - - -
அரசியல் எதிரிகளோடு போய்த் தங்கித் தனது குட்டுக் களை உடைத்துக்கொண்டிருக்கும் தன் மகள் மங்காவை அவர்கள் கிட்நாப்' செய்துகொண்டு போய்ப் பலவந்த, மாகத் தன்னை எதிர்த்து மேடையில் பேசவைப்பதாகக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து: