நா. பார்த்தசாரதி 175 வேறுபாடு இல்லை. முடியரசு ஆட்சி இல்லை என்றெல்லாம்: கூறிச் சங்கக்ாலம் என்பதை நம் விருப்பத்துக்கு வளைக்கக் கூடாது. கிடைக்கிற சான்றுகளையும் வரலாறுகளையும் புறக்கணித்துவிட்டு எந்த ஆராய்ச்சியிலும் முடிவு காணக் கூடாது. ஆனால் பலர் இன்று அப்படிக் காண்கிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்றைய சீர்த்தித்தவாதி' களை விடத் தீவிரமான சீர்திருத்தவாதிகளாகச் சங்க காலத்துப் புலவர்களைக் காண்பித்துவிடவேண்டும் என்கிற" பேராசையினால் தான் இந்த விதமான முடிவுகளைச் சொல்ல முடிகிறது. உண்மை. கசப்பானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதுதான் சிறப்பான செயல். "அறு வகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும் என்று தொல்காப்பியர் பார்ப்பனர், அரசர், வேளாளர், வணிகர் என்பதாகப் பிரிவு களைக் கூறியிருந்ததால் தொல்காப்பியரை இன்றைய சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் ஆசை நமக்கு வந்து, "அவர் சாதிகளையே கூறவில்லை என்று நாம் அவருக்குப் புது நற்சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அறிவுபூர்வமான ஆராய்ச்சி வேண்டுமே ஒழிய உணர்வு பூர்வமான ஆராய்ச்சியால் பயனில்லை. ஒவ்வொரு கடந்த காலத்தையும் நமது நிகழ்கால நிலைகளுக்கு ஏற்ப வளைப் பது ஆராய்ச்சியாகாது. இப்படி ஆராய்ச்சி நிலை நம்மவர்" களிடம் மட்டும்தான் இருக்கிறது. என்னை எடுத்துக் கொள் ளுங்கள், நான் சுயமரியாதைக்காரன். எனக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது. அதனால் எனக்கு மிகவும் பிடித்தல் ஆசிரியரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமாகிய திருவள்ளுவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடை யாது என்று நான் சொல்ல முயலக் கூடாது. என் நண்பர். களுக்கு என் காலத்துக்கு முந்தியவர்களைப்பற்றி விளக்கும்ா போது அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே மாறா மல் மாற்றாமல்விளக்கும் திராணி எனக்கு இருக்கவேண்டும். அந்தத் திராணி எனக்கு இல்லையானால் நான் பகுத்தறிவு வாதி இல்லை. பொய்களிலும் பூசி மெழுகுதலிலும், சுகம் காணும் மனப்பாங்குள்ளவன் ஆராய்ச்சியாளனாக இருக்க
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/177
Appearance