162 - பொய்ம் முகங்கள் ரகு மேடையிலிருந்து வந்தபோது அவனோடு ஒரு பட்டாளமே வந்தது. தன்னுடன் வந்தவர்களில் புதியவர் களுக்குச் சுதர்சனனை ரகு அறிமுகம் செய்து வைத்த போது, - 'அடடே! அப்பிடிங்களா? அண்ணன் தமிழ்ப் புலவர்ங் கிறீங்க. தெரிஞ்சிருந்தா ஐயாவைப் புத்தி இவரையும் ரெண்டு வார்த்தை பேசச் சொல்வி மேடையில் ஏற்றியிருக்க லாமே?' என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொல்லியதைக் கேட்டபோது உலகம் முழுவதுமே மேடை யில் ஏறிப் பேசுவதற்கு ஏங்கிக் கொண்டு தவிப்பதுபோல அவர்களுக்குள் ஒரு பாவனை இருக்கிறது. என்பதை உணர முடிந்தது. சுதர்சனனும் அப்படி ஏங்கியிருக்க வேண்டும் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? - - திரும்புகிற வழியில் ஏதோ விளம்பர போர்டில்லாத மெஸ் போன்ற ஓர் இட்டிலிக் கடையில் கூட்டமாக அத்தனை பேரும் நுழைந்து இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். ரகுவுக்குக் குறைந்தது இருபத்தைந்து ரூபாயாவது அன்று கையிலிருந்து செலவழிந்திருக்க வேண்டும் என்று சுதர்சனன் . அதுமானித்துக் கொள்ள முடிந்தது. தமிழநாட்டின் அரசியல் முக்கியஸ்தன் செல் வாளியாக இருந்தே தீர வேண்டிய அவசியமும் அரசியல் மிகவும் காஸ்ட்லி"யாக இருப்பதும் புரிந்தது. அறைக்குத் திரும்பிச் சிறிது நேரமானதும் தாங்கு வதற்குமுன் ரகு தற்செயலாக ஏனப்பா சுதர்சனம்? நீ இங்கேய்ே நம்ம ட்யூட்டோரியில்லே இருந்துக்கிறியா? அல்லது ரெகுலர் சர்வீஸா ஏதாவது ஸ்கூல்லே போய் வேலை பார்க்க ஆசையா?” என்று அவனுடைய வேலை யைப் பற்றி அப்போதுதான் ஞாபகம் வந்தவனைப் போல் வினவினான். திடீரென்று அவன் இதை வினவியிருந்ததால், சுதர்சனனுக்கு உடனே இதற்கு என்ன பதில் சொல்வ. தென்று தெரியவில்லை. . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/164
Appearance