உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பொய்ம் முகங்கள் யின் கற்புச் சிறந்ததா? மாதவியின் கற்புச் சிறந்ததா?-- என்று தலைப்பு இருந்தாலும் எப்படியாவது சுற்றி வளைத்து வாதங்களைக் கற்பித்து நியாயங்களைத் தேடி "மாதவியின் கற்பே சிறந்தது என்று அடிகளார் முடிவு கூறுவார். மக்களைத் தேடிச் சென்று அவர்கள் குறை நிறை களைத் தாம் கவனித்து உதவினார் என்பதைவிட மக்கள் தம்மைத் தேடி வந்து தமக்கு உதவும்படியும் தம்மைப் புகழும்படியும் செய்து கொண்டிருந்தார் அடிகளார். அவர் ஒவ்வொரு வகையான மக்களுக்கும் தக்க விதமாகக் காண் பித்து மலருவதற்கு ஒவ்வொரு முகம் வீதம் பல முகங்கள். பல சிரிப்புக்கள், பல பாணிகள் வைத்திருந்தார். ஒரு சாமியார் இவ்வளவு வெறைட்டி'யோடு இருக்கிறாரே என்று மக்களும் மூக்கில் விரலை வைத்து வியந்தார்கள். மக்கள் வியக்கவும், பிரமிக்கவும் தொடங்கவே சாமியாரும் அதே வகை வியப்பையும், பிரமிப்பையும் புகழாக மாற்றிக் கேஷ் பண்ணத் தொடங்கியிருந்தார். வரவு பிரமாதமாக இருந்தது. நிறைய நிகர லாபமும் கிடைத்தது. முதலில் தானும் சிறிது காலம் ஐயாவிடமும், வேறு சிலரிடமும் வியப்புக் கொண்டதைப் போல் இந்த மகபதி அடிகளாரிடமும் வியப்புக் கொண்டிருந்தது சுதர்சனனுக்கு நினைவு வந்தது. பின்னால் நிலப்பிரபுக்களின் நண்பராக வும் முதலாளிகளின் விசுவாசியாகவும் பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே முற்போக்கு சீர்திருத்தம், என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவராகவும் இந்த அடி கனார் இருப்பதைச் சுதர்சனன் கண்டு பிடித்திருந் தான். . or - - - அவன் எதிர்பார்த்ததுபோல் அன்றிரவு பதினொரு மணிக்குமேல் ஊரடங்கியதும் மகபதி அடிகளாரின் கார் இரகசியமாகச் சு. த ர் சன் னின் வீ ட் ைடத் தேடி