உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 165 பிறருடைய அறிவை வளர்ப்பதுதான் கல்வி என்பதை விட அறியாமையைச் சுரண்டுவதுதான் கல்வி என்று எல் லாரும் எல்லாமும் சேர்ந்து பழக்கப்படுத்தி இருந்தார்கள். இப்படிப் பிறருடைய அறியாமையைச் சுரண்டும் திட்ட மிட்ட நோக்குடனேயே கல்லூரிகள், கலாசாலைகள், ! பல்கலைக் கழகங்கள் எல்லாமே தாராளமாக இயங்கி வருவதாகத் தெரிந்தது. - மனம் மலருகிற இயல்பான கல்விக்கும் இந்த ஏற்பாடு களுக்கும் சம்பந்தமே இல்லையென்று தோன்றியது. ரகுவோ தன்னுடைய சகலத்தையும் ஒரு வியாபாரத் தன்மையோடு நடத்தி வந்தான். அதைப் பற்றி அவனே அப்படித்தான் விவரித்தான். - ஒதுங்கி இருந்து இந்த மெட்ராஸ்லே ஒண்னுமே பண்ண முடியாது சுதர்சனம் நான் இப்போ கலமபகச் செல்வர் ஐயாகிட்டே இருக்கேன்னா அதுனாலே பல காரியங்களைச் சாதிச்சுக்க முடியுது, தமிழ்நாடு முழுவதும் எங்க இயக்கத்தைச் சேர்ந்த குடும்பங்களிலே எந்தப். பையன் எங்கேயிருந்து டுட்டோரியல் காலேஜ்ல சேரனும் னாலும் நேரே இங்கே புறப்பட்டு வந்துடற்ாங்க. என் னோட இந்த டூட்டோரியல் காலேஜோட பெயர் அவங் களுக்குத் தூக்கத்திலே எழுப்பிக் கேட்டாக்கூட ஞாபகம் இருக்காப்பிலே மனப்பாடம் ஆகியிருக்கு. சிண்டிகேட் சாரோடு சிநேகிதம் இருக்கிறதாலே யூனிவர்ஸிடி விஷயங். கள்ளாம் சுலபமா நடந்துடுது. இப்பிடி ஒண்ணை வச்சுத் தான் இன்னொண்ணு நடக்க வேண்டியிருக்கு. வேறே வழி இல்லே. வேற காலேஜ்ல வேலை பார்க்கலாம்னா நடிமாலே அதுவும் முடியாது. அரசியல் இயக்கம், தலைவர். மாநாடு அது இதுன்னெல்லாம் நமக்குன்னு சிலதைச் சொந்தமா வச்சுக்கிட்டு இனிமே ஒருத்தனுக்குக் கீழே கைகட்டிச் சேவகம் செய்யறதுங்கிறது. ரொம்பக் கஷ்டம்.' பொ-11 - - - - ... • -