நா. பார்த்தசாரதி 163 நண்பனுக்கு அப்போது தலைவர்-விழா எல்லாம். ஆமறந்து போய்த் திடீரென்று தன்னுடைய வேலை விஷயம் எப்படி ஞாபகம் வந்ததென்று நினைத்துச் சுதர்சனன் வியத் தான். ஒருவேளை தன்னை விரைவாகத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியின் ஆரம்பமாகத்தான் அந்த வினாவே வெளிவந்ததோ என்றுகூட அவனுக்கு நண்பனின் மேல் சந்தேகமாக இருந்தது. 'நிதானமா யோசிச்சு முடிவு பண்ணலாம். இப்போ தடுராத்திரியிலே பேசி முடிவு பண்ண வேண்டிய அத்தனை அவசரமான விஷயமில்லை அது' என்றான் சுதர்சனன். "அதுக்கில்லே! எனக்கு ஒரு புது ஐடியர் தோணிச்சு. ஏற்கெனவே சிண்டிகேட் சிதம்பரநாதன் என்னை விடாமத் தூண்டிக்கிட்டிருக்காரு. வெறும் பட்டப்படிப்போட போகாமே ஒரியண்டல் டைட்டில்ஸ் இருக்கே-அதாவது வித்வான் பட்டம், அதுக்கும் இங்கேயே கிளாஸ் நடத்த லாம். டுயூஷன் ஏற்பாடு பண்ணலாம். பிரைவேட்டா வித்வான் எழுதறவங்க எல்லாம் நிறையப்பேர் வந்து சேருவாங்க. அதை அப்படியே உன் பொறுப்பிலே விட்டு டலாம்னு நினைக்கிறேன். வித்வான், புலவர் பட்டங் களுக்கு இப்ப நிறையபேர் படிக்கத் தேடி வர்ராங்க." "யோசிக்கலாம். எனக்கு ஒண்னும் ஆட்சேபணை இல்லே! வத்தனை ப்ேர் சேருவாங்கன்னு பார்ப்போம். தினப்பத்திரிகையிலே உன் டுட்டோரியல்ஸ் பேரிலே ஒரு விளம்பரம் போட்டால் தானே தெரிந்துவிடும். "புதிதாக வித்வான் வகுப்புக்களுக்கும் பாடம் நடத்துகிறோம். சேர விரும்புகிறவர்கள் உடன் விண்ணப்பிக்கவும்' என்று விளம்பரம் கொடுத்தால் சரியாயிருக்கும்.' --- சரி! நாளைக்கே அந்த விளம்பரத்தைக் கொடுத்துப் பார்த்தால் போச்சு: சிண்டிகேட் சார் மட்டும் தயவுபண்ணி னார்னா நம்மகிட்ட வந்து சேர்ர ஒவ்வொரு ஸ்டூடண்டை யும் ஜெயிக்க வைக்கலாம். அப்படி ஜெயிக்க வச்சு ஒரு
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/165
Appearance