உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 நிசப்த சங்கீதம்

யாருப்பா? டீக்கடைப் பையன்... உடனே ஒரு ஸ்பெசல் டீ போட்டு மேடைக்குக் கொண்டா...தொண்டை வறளுது'- என்று நடுவே ஓர் அவசர ஆர்டரும் கொடுத் தார்.

"அப்பழுக்கில்லாத மனுசன். சொத்துச் சுகமெல்லாம். தேசத்துக்காகச் செலவழிச்சே ஏழையானாரு கடவுளே எதுத்திக்கிட்டு எதிரே வந்தாலும் நெசத்தைப் பேசப் பயப் படமாட்டாரு. யதார்த்தவாதி வெகுஜன விரோதீம் பாங்களே...அப்படித்தான் ஆச்சு இந்த மனுஷன் கதையும், சுதந்திரம் வந்தப் பெறவு காங்கிரஸ் க்கு வந்த பெரிய மனுசன்களும், புதுப்பணக்காரங்களுமா, இந்தப் பழைய ஆளைக் காங்கிரஸி லேருந்து வெளில துரத்திட்டாங்க”......

- "அப்புறம்...' -

சின்னி தொடர்ந்தான் :

"மனுசன் அசரலே மக்கள் மு ன் னே ற் ற ப் பேரணி"ன்னு தொடங்கி லஞ்ச ஊழலுங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எதிர்த்து தனி ஆளா நின்று இப்பிடி போராடிக்கிட்டிருக்காரு, இந்த ஆளுகிட்டப் பட்டம் பதவி பணம்லாம் இல்லேன்னாலும் ஜனங்க இவரைக் கடவுளா மதிக்கிறாங்க...' - -

மைக்கில் மிஸ், மங்காவின் தந்தையான அந்த மத்திரி பெயரைச் சொல்லி அவரது லஞ்ச ஊழல்களைப் பற்றிப் பேசப் போவதாக அப்போது சவால் விட்டுக் கொண்டிருந்

தார். சிவகாமிநாதன். . . - -- -

ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த சுருக்கெழுத்தாளர் ஒருவர் டீக்கடையை ஒட்டிக் கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பத்தருகே பெஞ்சில் அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொண் டிருந்தார். 4. . - - - s'. -

சாதாரண் உடையிலிருந்த அவரை மேடையிலிருந்த படியே சுட்டிக்காட்டி, "இங்கே வந்திருக்கும் சி.ஐ.டி.த் தோழ்ர் நான் சொல்லுவதை ஒன்று விடாமல் குறிப்