உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - பொய்ம் முகங்கள் வர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று ரகு வற்புறுத்தி னான், அவன் சொல்லியபடி செய்வதாக இருந்தால் பாடங்க களை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நோட்ஸ் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். டுட்டோ ரியல் காலேஜ்' என்பதற்குக் கீழே இவ்விடம் மொத்த மாகவும் சில்லறையாகவும் கல்வி விற்கப்படும்’ என்றும் சேர்த்து விளம்பரம் செய்துவிடலாம்போல் இருந்தது. அந்த வகையில்தான் எல்லாக் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் சுதர்சனன் தன்னளவில் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. மாண வர் க ைள அறிவுத் தாகமுள்ளவர்களாக மாற்ற முயன்றான். தொடக். கத்தில் அம்முயற்சி கசாப்புக் கடை முகப்பில் அமர்ந்து கொண்டு ஜீவகாருண்ய உபதேசம் செய்வதுபோல் டுட்டோ ரியலுக்குப் பொருந்தாததாக இருந்தது, என்றாலும் திாளடைவில் பயனளிக்கத் தொடங்கியது. .. மாணவர்கள் அவனுடைய திறமைகளைச் சுலபமாகத். தவிர்த்துவிட முடியவில்லை. அவனுடைய நேர்மையும் துணிவும் அவர்களுக்குப் பிடித்திருந்தன, பொய் சொல் லவோ பூசி மெழுகவோ அவன் ஒரு போதும் முயலவில்லை. ஒரு நாள் வகுப்பில் தன் பழைய பேராசிரியர். ஒருவர் பெயரைச் சொல்லி சங்க காலத்தில் சாதிப் பாகுபாடே கிடையாது’ என்று அவர் எங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நீங்க சாதிப் பாகுபாடு இருந்தது என்கிறீர் களே! எப்பிடி சார் அது பொருந்தும்!" என்று மாணவன் ஒரு கேள்வி கேட்டான். ; 'ஆராய்ச்சிக்கும் உண்மை காண்பதற்கும் அடிப்படை நாணயமும் சத்திய வேட்கையும் மிகமிக முக்கியமாக வேண்டும் த்ம்பீ! இன்றைய சூழ்நிலையின் செளகரியங், களுக்குச் சங்க காலத்தையும்; சங்க காலப் புலவர்களையும். வளைக்கக்கூடாது தம்பீ! இன்று நாம் சாதி வேறுபாடுகள் கூடாது என்று நினைக்கிறோம். முடியரசு ஆட்சி கூடாது என்று நினைக்கிறோம். அதனால் சங்ககாலத்திலே சாதி: