பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17.3 சண்முகனாரும், கதிரேசன் செட்டியாரும், தமிழ்த் தாத்தா .சாமிநாத ஐயரும், சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பயிற்றிய காலத்தில் வெறும் உணர்ச்சிப் பெருக்கு அடங்கி யும், தமிழ் அறிவு ஓங்கியும் இருந்தது. இன்றோ உணர்ச்சிப் பெருக்கே அறிவின்மையை மறைக்கும் போர்வையாக அமைந்து பல வெற்றுணர்ச்சியாளர்களைப் பாதுகாத்து விடுகிறது. இந்தப் பாதுகாப்புத்தான் இன்று பலரைக் காக்கும் கவசமாகவும் இருக்கிறது என்பதைச் சுதர்சனன் நன்கு உணர்ந்திருந்தான். - "பாஸ் மார்க் எவ்வளவு சார்? முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும்? அதேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே? தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங் களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே?' என்றெல்லாம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே சுதர்சனனைக் கேள்வி களால் துளைத்தெடுத்தனர். கல்வி, படிப்பு, ஞானம், அறிவு எல்லாம் வெறும் மார்க், வேட்டை ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை வேண்டா வெறுப்பாக வும், அருவருப்போடும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் சுதர்சனன். கற்பிப்பதற்கு ஞான. வான்கள் தேவையில்லை; மார்க் தரகர்களே போதும் என்று நிரூபணம்ாகிவிட்ட காலத்தில் கற்பிப்பதற்கும் ஞான வான்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் புரிந்தது. இன்றைய கல்விக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லைதான். இன்றைய கல்வி என்பது ஓர் ஏற்பாடு மட்டுமே. குடி தண்ணீர்த் திட்டம் பாதாளச் சாக்கடைத் திட்டம் போல் கல்வி வசதியும் ஒரு திட்டமாக இருக்கிறது. அதில் போய் ஞானம், உள்ளுணர்வு, அறிவுக்கூர்மை இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருக்கும் அதற்கு நேரமும் அவகாசமும் அவசியமும் இல்லை. . . . கத்தை கத்தையாக் நோட்ஸ். கேள்வி பதில் எல்லாம் தயாரித்து சைக்ளோஸ்டலை செய்து வாரம் வாரர் மான