210 நிசப்த சங்கீதம்
போகிறார்களோ என்று சந்தேகமாயிருந்தது முத்துராம லிங்கத்துக்கு. -
'ஐயா வாழ்க்கையிலே தான் சுகம் இருக்கணும். சுகத்துக்காகவே வாழ்க்கை இருக்கணும்கிற சொகுசு மனப் பான்மை எனக்கும் இல்லை. இவளுக்கும் இல்லை. நீங்கள் ளாம் கஷ்டப்பட்டுத் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வேலை செய்யப் போறப்போ...நாங்க மட்டும் எதுக்குச் சும்மா இருக்கணும்?'-என்று கூறியபடியே அவர்கள் எல்லாருமே தடுத்தும் கேளாமல் அச்சகத்துக்குள் நுழைந்து வேலை செய்யச் சேர்ந்து கொண்டார்கள் மங்காவும் முத்துராம லிங்கமும்.
பில் போடுதல், சந்தாப் பிரதிகளை உறையில் போடு தல் ஆகியப் பணிகளை அவர்கள் முதலில் செய்தனர்.
பெண்களான கஸ்தூரியும், மங்காவும் அச்சிட்ட ஃபாரங்களை மடித்தார்கள். முத்துராமலிங்கம் பின் அடித்துத் தள்ளினான். சண்முகம் கட்டிங்'-மிஷின் வேலையைப் பாண்டித்துரையின் உதவியோடு கவனித்துக் கொண்டார். சிவகாமிநாதன் விலாசங்கள் ஒட்டிய மேலுறையில் இட்டுப் பிரதிகளைத் தயாரித்து அனுப்ப
ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். . - r
தியாகியின் குரலுக்கு நாடு முழுவதுமாக ஓர் இரண் டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். கடைகள், ஏஜண்டுகள் மூலமாக மேலும் ஒரு மூவாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின. ஆனால் பத்திரிகைக்கு நாடு முழுவதும். ஒரு நன்மதிப்பும், மரியாதையும் இருந்தன. அதற்குக் காரணம் தியாகி சிவகாமிநாதனிடம் இருந்த தார்மீக லட்சியங்களும், சத்திய ஆவேசமுமே. . . . . . .
அரசியல் இலக்கிய உலகின் சில உன்னதக் கோட்பாடு
களுக்காக வாதிடும் குரலாக அது இருந்தது. எதையாவது எப்படியாவது எழுதிப் பணம் பண்ணும் வியாபார மாய்