154 - பொய்ம் முகங்கள் அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்-என்றான். ரகு. பத்து நிமிஷத்தில் அந்த நண்பர்களும் வந்து சேர்ந்தார் கள். நான்கு பேருமாக மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பும்போது பகல் மணி இரண்டரை ஆகியிருந்தது. சுதர்சனனுக்கு ஒரே அசதியாயிருந்தது. * அறைக்குத் திரும்பியதுமே சுதர்சனன் அயர்ந்து தூங்கி விட்டான். ரகுவும் அவனுடைய நண்பர்களும் தலைவர் பற்றியும் கட்சி பற்றியும் தங்களுக்குள் இடைவிடாமல் சன சளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் தான் அந்தப் பேச்சு சுதர்சனனின் துரக்கத்துக்கு இடை. யூறாக இருந்தது. அப்புறம் துரக்கம் ஆழ்ந்ததாக அமையவே அவனுக்குத் தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த எதுவுமே நினைவுமில்லை, தெரியவுமில்லை: துரங்கிவிட்டான். - - - - மறுபடி அவன் தன் உறக்கம் கலைந்தபோது தானிருப் பது ஆதர்சபுரமா சென்னையா என்ற சுதாரிப்பு விரு. வதற்கே சில விநாடிகள் ஆயின. அவ்வளவு அயர்ந்து துரங்கியிருந்தான். - - ... • என்னப்பா நல்ல , தூக்கம் போலிருக்கே?... காபி குடித்துவிட்டுக் கடற்கரைப் பக்கம் போகலாமா?என்றான் ரகு, எழுந்து முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு அவனோடு புறப்பட்டான் சுதர்சனன். போகிற வழியில் காபி குடித்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்றார்கள் அவர்கள். - r ," மணலில் காற்றாடச் சிறிதுநேரம் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவதற்குத்தான் ரகு தன்னைக் கடற்கரைக்குக் கூப்பிட்டதாகச் சுதர்சனன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கடற்கரை போனதும்தான் அங்கே தலைவர் கலம்பகச் செல்வரின் பிறந்தநர்ள் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது:
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/156
Appearance