62 'பிறந்த
பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறான். வியாபார உலகிலிருப்பவர்களுக்கு வியாபாரம்தான் வாழ்க்கை, அரசியல் உல்கிலிருப்பவர்களுக்கு அரசியல்தான் வாழ்க்கை. இலக்கிய உலகிலிருப்பவர்களுக்கு இலக்கிய்ம் தான் வாழ்க்கை. வட்டக்கோட்டில் சுற்றி வருகிறவர் களுக்குத் திருப்பமோ, மாறுதலோ ஏது? *
விலையுயர்ந்த ஸ்நோவாசனைத் தைலம் ஆகியவற்றின் மணம் நாசித்துளைகளில் புகுந்து கிறக்கியது. எங்கோ பார்த்துக்கொண்டே சிந்தனையோடு பிரமநாயகத்துக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்தவன் போதையூட்டும் அந்த மணத்தால் கவரப்பட்டு பார்வையை நேர் எதிரே திருப்பினான். மெல்லிய நீலநிற வாயில் புடவையும், பாப் செய்த கூந்தலும், தலைக்குமேல் சிங்காரப் பட்டுக் குடை யும், செம்மை நிறம் மினுக்கும் உதட்டுச் சாயம் பூசிய உதடு களுமாக ஒரு சிங்களப் பெண் அவன்மேல் இடித்துவிடாத குறையாக நடந்து வந்துகொண்டிருந்தாள் வாசனை ஆளை மயக்கியது. அழகியநம்பி தடுமாறினான்; திடுக்கிட்டுப் பின்னுக்கு நகர்ந்துகொண்டான்.
தனக்கு வழிவிட்டு நகர்ந்துகொள்வதற்காக அவன் அடைந்த பரபரப்பையும் பதற்றத்தையும் பார்த்து அந்தப் பெண்.அலட்சியமாகச் சிரித்துக்கொண்டே மேலே நடந்து சென்றாள். அவனுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அவன் தெருக்கோடிக்கு வந்திருந்தான். தம்பி இதுதான் நம்முடைய கடை. உள்ளே வா’-என்று கூறிக்கொண்டே ஒருபெரிய கடைக்குள் நுழைந்தார் பிரமநாயகம்.
18. கடிதங்கள்
அழகியநம்பி வியப்படைந்தான். அத்தனை ஆட்களை வைத்து வேலை வாங்கும் அவ்வளவு பெரிய கடைக்குப் பிரமநாயகம் சொந்தக்காரர் என்றறிந்தபோது அவனுக்கு விழப்பாகத்த்ான் இருந்தது. வாழை இலையிலிருந்து.