பக்கம்:தமிழ் உரை நடை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*58 தமிழ் உரை நடை காலத்தில் பல இலக்கியங்களும் தோன்றின என்பதை மறுக்க இயலாது. ஆனல், அத்தனையும் சமய சம்பந்தமான இலக்கியங்களாகவே அமைந்து விட்டன. எனவே, அவற்றுள் சமயக் காழ்ப்பும், சமய வெறியும் தலே தூக்கி நிற்கக் காணலாம். இவையெல்லாம் இடைக் காலத்தில் தமிழின் மேல் வடமொழி செலுத்திய ஆதிக்கவாடையைக் காட்டுகின்றன. வல்லவா? அக்காலத்திலே உண்டான மற்ருேர் இலக்கியம் கல்வெட்டு இலக்கியம் எனக் கண்டோம். அதிலும் அதிக மாக வடமொழி வாடை வீசக் காண்கின்ருேம். "போக பூமி இதுவென்னப் போகமெல்லாம் வந்தீண்டி ஏகவாணை அரசுரிமை ஏழ் பொழில்களும் பெற்றதென்னப் பாற்கடலிற் கார்க்கட லிப்படி வாழ முடி சூடி ஆர்த்தவமராபிஷேகச் (சல) தியரசர் திளைத்தோட எவ்வுலகமும் இருள் நீங்க வந்த கோமானிவனென்று கவ்வைதீரக் கலிகாலத் தாதி காலங் காட்டினனென இவன் காக்கும் அகில லோகங்களும் அடியடையக் குலைபடுவன தெங்கு களே கோட்படுவன இளங்கமுகே.' என்ற தொடர் கொண்ட கோவிராஜகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ரீ ராசாதிராச தேவர் சிறப்புப் பற்றிய கல்வெட்டும் பிறவுமாம். அக்காலத்தில் வடமொழி மாற்றி அமைத்த மொழி பெயர்ப்பு கிலே இஃதாக, மாற்ருத வகையிலே அப்படியே சொல் அமைப்புக்களைக் கொண்டே இயங்கும் ஈட்டு உரைப் பகுதிகள் ஒரு சில காண்போம். 1. கடல் சூழ்ந்த பாரேழும் என்ற தொடக்கத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/167&oldid=874437" இலிருந்து மீள்விக்கப்பட்டது