நா. பார்த்தசாரதி 97 விழுங்கினாரே ஒழிய அவனுக்குப் பிடி கொடுக்கவில்லை. அவனுக்கு அவர் மேல் பரிதாபமாக இருந்தது. பேச்சை மாற்றி வேறு எதை எதையோ சிறிது நேரம் பேசிக்கொண் டிருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார் பத்தர். போய்ச் சேருவதற்கு முன் சம்பந்தமில்லாமல் திடீ ரென்று இருந்தாற்போலிருந்து, ஸ்கூல் மேனேஜ்மெண்டுக் கும் உங்களுக்கும் ஏதாவது மனஸ்தாபமா சார்? ஜனங்க என்னென்னமோ பேசிக்கிறாங்களே?' என்று கேட்ட பத்த: ரிடம் ஒரு சிறிதும் தயங்காமல் ஒளிக்காமல், மறைக்காமல் என்ன மனஸ்தாபம் என்பதைச் சுதர்சனன் விவரித்துச் சொன்னான். தலைமையாசிரியரையும், பிச்சாண்டியா பிள்ளையையும் போல் ஜமீன்தாரைப் பற்றிய தன் விமர் சனத்தைக் கேட்க அஞ்சிப் பத்தரும் மெல்ல நழுவுவதைச் சுதர்சனன் உணர்ந்தான். செல்வாக்குள்ளவர்களின் தவறு. க்ளையோ, குற்ைகளையோ கேட்கவே அஞ்சும் மனப் பான்மை சமூகத்தில் சராரிசயான பல மனிதர்களுக்கு இருப் பதைச் சுதர்சனன் அடுத்தடுத்துக் கண்டான். அதைரிய வான்களாகவும், பிழைகளைப் பொறுத்துக்கொண்டு சலாம். போடுகிறவர்களாகவும் இருக்கும் ஆஸ்திகர்களைவிட அவற்றை எதிர்க்கும் நாஸ்திகனான தான் நெஞ்சை நிமிர்த். திக் கொண்டு நின்று பெருமைப்படலாம் போல் தோன்றி யது அவனுக்கு. . c- - ஆனால் அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் அவனை அப்படிக் கர்வப்பட விடுவதற்குத் தயாராயில்லை. மறுநாள் விடிந்ததிலிருந்து அவனைத் துரத்துவதற்கு நேரடியாகவும்: மறைமுகமாகவும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. தன்னை எதிர்த்துப்பேசிவிட்ட ஓர் ஆசிரியன் என்பதனால் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஜமீன்தார் அவனை எப்படி. யும் பழி வாங்குவது என்று முடிவு செய்துவிட்டார். தலைமையாசிரியரைக் கூப்பிட்டுச் சுதர்சனனை எப்படியும். டிஸ்மிஸ் செய்தே ஆகவேண்டும் என்றார். அவர். -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/99
Appearance