1 () 6 பொய்ம் முகங்கள் சனன் மேலுள்ள ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ளவே. முடியவில்லை. - இந்த ஊரிலே ஏற்கெனவே அக்ரேரியன் ப்ராப்ளம்" நிறைய இருக்கு. இங்கே வந்து சூழ்நிலையைக் கெடுக்கி நாப்லே பிரசங்கம்லாம் பண்றாங்க. நம்ம உப்பையே தின்னுட்டு நமக்கே வேட்டு வைக்கிறாங்க. விசுவாசம்கிறதே. நாட்டிலேருந்து போயிடிச்சு. பெரிய மனுஷனுக்குச் சாதாரண மரியாதைகூடத் தர மாட்டேங்கிறாங்க ஊரே நல்லா இல்லே'- என்று அழுகுனி வேதாந்தம்போலப் பேசத் தொடங்கினார் அருள்நெறி ஆனந்தமூர்த்தி. இதற்கு. அடிகளார் எதுவும் பதில் சொல்லவில்லை. - -
- gffrL。 இதையெல்லாம் கண்டிச்சுப் பிரசங்கத்துலே ரெண்டு வார்த்தை ஸ்ட்ராங்காச் சொல்லனும்’
இதற்கும் அடிகளார் பதில் சொல்லவில்லை. நிலப். பிரபுக்களும், உடைமையாளர்களும், வசதியுள்ளவர்களும், உலகம் தங்களுக்காகவே என்று நினைக்கவும் அதற்கு. மாறான சூழ்நிலையை எதிரே சந்திக்க நேர்ந்தால், "எல்லாமே கெட்டுவிட்டது -என்று பேசவுமாக இருப் பார்கள் என்பதற்கு நிதரிசனமாக இருந்தார்கள் அங்கே கூடியிருந்த ஊர்ப்பிரமுகர்கள். அவர்களுக்குக் கோடிக் கணக்கான அடித்தளத்து மக்களின் சிரமங்களைப் பற்றிய பிரக்ஞைகூட இல்லாதிருந்தது அப்போது, - : ". சரியாகப் பிற்பகல் 3; மணிக்குப் பள்ளிக்கூடத்துப் ப்யூன் நாதமுனி ஒட்டிய உறையைச் சுதர்சனனிடம் கொண்டு வந்து கொடுத்து டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் ஞாபகமாகக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனான். தன்னிடம் நாதமுனி அதைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போன புத்து நிமிஷத்துக்குப் பின்புதான் சுதர்சனன் அதைப் பிரித்தான். படித்துப் பார்த்தான். ஆனால் பரபரப்போ பதற்றமோ சிறிதும் அடையவில்லை. சிறிது நேரத்தில் பள்ளி, வகுப்புக்கள் முடிவதற்கான மணி அடித்தது. இலக்கிய மன்றவிழா இருந்ததனால் இரு பீரியடுகள் முந்திய