13 2 நிசப்த சங்கீதம்
வியந்து கொண்டான் முத்துராமலிங்கம். பாபுராஜ் நீச்சல் உடையணிந்த ஏழெட்டு எக்ஸ்ட்ரா நடிகைகள் சூழ அதே. போல் உடையணிந்த அல்லது அதைவிடக் குறைவான உடையணிந்த கதாநாயகியோடு ஒரு வேனிலிருந்து இறங்கி, வந்து கொண்டிருந்தான். -
என்னப்பா...? யாரோ பொம்பளை கூடப் பேசிக் கிட்டிருந்தியே, யாருப்பா அது?’’
என் கூடக் காலேஜிலே படிச்சிவ." "அவளை ஏன்ப்பா விட்டே...ஷோக்கா இருந்தாளே.... இந்த வீன்லே அவளையும் குளிக்க வச்சுக் காமிராவுல். குள்ளே பிடிச்சுப் போட்டிருக்கலாமே...?
"அவமந்திரி எஸ்.கே.சி. நாதனோட மக. நீங்க எங்கே காமிராவிலே பிடிச்சிடப் போlங்களோன்னு பயந்து தான் அவளே இத்தினி அவசர அவசரமாப் போறா.
ஐயையோ பெரிய இடத்து விவகாரம். பேசறதே. ஆபத்து வா வேலையைப் பார்க்கலாம்' என்று மந்திரி என்ற பேரைக் கேட்டதுமே பாபுராஜ் பயந்து உதறினான்.
"எல்லாவகையிலும் கெட்டவர்கள் பெரிய பதவி யில் இருக்கிறார்களே என்பதற்காக அவர்களுக்குப் பயந்து பதறி மரியாதை செலுத்தும் இந்த அடிமைக்குணம் இந்த நாட்டை விட்டு என்றுதான் போகப் போகிறதோ? என்ற ஏக்கத்தோடு நீச்சல் குளத்தில் இறங்கினான் முத்து. ராமலிங்கம். - - ... ."
49
முதல் மாதச்சம்பளம் கைக்கு வந்ததும் மிகவும் சிரமப் பட்டு முயன்று மிச்சம் பிடித்து ஐம்பது ரூபாய் ஊருக்கு, மணியார்டர் செய்திருந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனைச் சென்னைக்கு அனுப்பியதே ஏதாவது பணம் சம்பாதித்து உபயோகமாகக் குடும்பத்துக்கு அனுப்புவான்