உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 155 தெரிந்தது. ரகுவும் நண்பர்களும் பொதுக்கூட்ட மேடைக் குப் போனார்கள். சுதர்சனன் தனியே ஒரு மூலையில் மணலில் போய் அமர்ந்தான். ரகுவும் நண்பர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் மேடைக்கு வர மறுத்து விட்டான். . - தனியே மணவில் உட்கார்ந்து அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது "வணக்கங்க! எப்போ வந்திங்க...?" என்று பழகிய குரல் ஒன்று கேட்டு அவன் நிமிர்ந்து பார்த் தான. பழைய இயக்கத் தோழரும் குடந்தை நகரில் செயலா ளராக இருந்தவருமான 'பொன்னழகு" நின்று கொண்டிருந் தார். - 'அடடே வாங்கண்ணே உட்காருங்க!" என்று. அவரை வரவேற்றான் சுதர்சனன். பொன்னழகு உயரமும் பருமனுமாக வாட்டசாட்டமாயிருந்தார். . "ஆமாம்! நீங்க்.தெற்கே எங்கேயோ-அதென்ன பேரு?-ஆரவாரபுரமா ஆதர்சபுரமா? அங்கே தமிழ்ப் பண்டிட்டா இருக்கறதாவில்ல்ே கேள்விப்பட்டேன்?' என்று கேட்டுக் கொண்டே மணலில் உட்கார்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் ஆதர்சபுரத்தில் வேலையை விட்டுவிட்டுத் தான் சென்னைக்கு வந்து சேர்ந்த விவரங். களை அவருக்குத் தெரிவித்தான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைக் கேட்காமலே அவனிடம் மேலும் தெரிவித் தார். z 3. - . . . "நம்ம ஊர்க்காரரு இங்கே மினிஸ்டர் ஆனாலும் ஆனாரு. அதுவும் இதுவுமா வந்து குவியுற பணத்தை என்ன பண்றதுன்னு அவருக்கே புரியிலே. புதுசா இங்கே மெட்ராஸ்லே ஒரு ஃபைவ் ஸ்டார் ஒட்டல் கட்டித் திறந் திருக்காரு. அதிலே இப்போ நான் ஒரு டைரக்டர். பினாமிதான்...' .