பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C)'30.4.85 203 கல்வியின் அமைப்பு முறையே தனியானது. நம் நாட்டில் எதற்கும் பட்டம் தேவை என்ற நிலை: அது இங்கே இல்லை. நான் முன்னரே சொன்னபடி, பள்ளிப்படிப்பு இல்லாமலேயே கல்லூரியில் சேரலாம். பள்ளியில் படிப்பதி லும் மாணவரிடம் ஒழுங்கு இல்லை. பெற்றோர்களும் தலை யிட்டு,தகுதி இன்றேனும் தம் பிள்ளைகளை மேல் வகுப்பிற்கு மாற்ற வேண்டுவர் இல்லை. எனவே இங்கே ஆண்டு இறுதித் தேர்வும் இல்லை. நிறுத்துவதும் இல்லை. பருவங்களில் நடைபெறும் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முடிவினைக் காண்கின்றனர். மேலும் மாணவர் சிலர் தம்மை மறக்கும் நிலையில் குடித்தும் பல மருந்துகளை உண்டும் நிலைகெடுகின்றனர். ஒழுக்கக் கேட்டுக்கும் குறை வில்லை. பள்ளிநிலையில் நம் நாட்டைப்போல முறையான பாடங்களைப் பயிலல் என்ற முறையில்லை. ஒரே வகுப்பில் நான்கு பிரிவுகள் (Sections) இருப்பின், அனைத்துக்கும் பாட நூல் ஒன்றாயினும், ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் கள் தம் விரும்பம்போல் பாடம் நடத்தி, பருவத் தேர்வும் கொள்வர். ஒரு வகுப்பில் பாட நூலில் முற்றும் முடிந்திருக் கும்; ஒன்றில் பாதி, ஒன்றில் மூன்றில் ஒரு பகுதி, ஒன்றில் கால் என இப்படி இருப்பினும் ஆண்டுப் பொதுத் தேர்வு இன்மையின் யாரும் கவலைப்படுவதில்லை. மேலும் திங்கள் தொறும் பருவந்தொறும் நடத்த வேண்டிய பாட எல்லைகள் அமைத்து, திட்டம் தீட்டி அதை முடிக்க வேண்டும் என்ற நியதியில்லை இங்கே மாணவர் மனம் போல ஆசிரியர் நடக்க வேண்டும். மாணவனைக் குறை சொல்லவோ அடிக்கவோ கூடாது. எனவே கல்விமுறை நன்றாக இருந்தும் நடைமுறை ஒழுங்காக இல்லாமையின் பல மாணவர் பாழ்படுகின்றனர். பொதுவாக மாணவர் தரமும் நடுத்தரமாகவே உள்ளது. ஆனால் அதே வேளையில் முயன்று முன்னுக்கு வரவேண்டும் என்று உழைக்கும் ஒரு சில்ர் தக்கவகையில் உயர வழி உண்டு என்பதையும் மறக்க முடியாது. நான் மேலே ஆரம்பப்பள்ளி யில் காட்டியபடி இங்கேயும் தனித்தனி செயல்முறை (Projects) வகுப்பின் தரத்துக்கு ஏற்ப உள்ளது. அவற்றைச்