பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வழக்குத் தொடுத்துள்ளார். பிள்ளைகள் பெற்றோர் வழக்கு - கணவன் மனைவி வழக்கு - ஆசிரியர் மாணவர் வழக்கு பயனற்ற வெற்று வழக்குகள் என இங்கே இல்லாத வழக்கு களே இல்லை எனலாம். அதற்கென அரசாங்கத்தார் அமைத்த நீதிபதிகள் தவிர்த்து, பொதுமக்களிடையிலேயே Glav É@udeir pišiscit (Public Court and Peoples Court) அமைத்து, பல சிறு வழக்குகளை அம் மன்றங்கள் வழியே தீர்க்க ஏற்பாடு செய்துள்ளனர். நம் நாட்டிலும் சில ஆண்டு களுக்கு முன் கெளரவ நீதிபதிகள் (Honarary Magistrates) பொதுமக்களிடையிருந்து நியமனம் செய்யப்பெற்று பல வழக்குகள் அம் மன்றங்களால் தீர்க்கப்பெற்றன. ஏனோ அவற்றை அரசாங்கத்தார் நீக்கி விட்டனர். இங்கே உள்ள நாளிதழ்களில் நீதிமன்றங்கள் பற்றியே தனிப்பகுதிகள் ஒதுக்கப்பெறுகின்றன. பள்ளிப்பிள்ளைகள் காணாமற் போவது, கொலை, கொள்ளை முதலியன பற்றிய செய்தி களைக் காணும்போது நம் நாடு எவ்வளவோ மேல் என்ற உணர்வு உண்டாகிறது. காரும் பணப் புழக்கமும்தான் வாழ்வு என்று எண்ணுபவருக்கே இங்கே வாழ்வு இனிக் கலாம். அளவுக்குமீறிக் குடித்தல், மாத்திரைகள் உண்ணல் இவை பெரும்பாலும் சாதாரணமாக உள்ளமையின் என்ன செய்கிறோம்" என்று தெரியாமலேயே சிலர் தவறுகள் செய் கின்றனர். இறைவன்தான் இவர்களையும் இவர்தம் நாட்டையும் அதன்வழி உலகத்தையும் காத்தல் வேண்டும் என்று அவனடி வணங்கினேன். முன்பு பள்ளிகளின் ஆரம்பக்கல்வி பற்றிய சில விளக்கங் களைத் தந்தேன். மேலே உயர் நிலைக்கல்வி பற்றியும் சில நினைக்க வேண்டியுள்ளது. திருமதி. சதானந்தம் அவர்கள் அந்த வட்டத்தில் அத்தகைய உயர்பள்ளி ஒன்றில் பணியாற்றுகின்றனர். நான் கடந்த இரு வாரங்களில் கண்ட பல பள்ளிகளின் நிகழ்ச்சிகளும் பிறவும் பல உண்மை களை எனக்கு விளக்கின. -