பக்கம்:இலக்கியக் கலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலக்கியக் கலை சமுதாயம் வெளிப்படுத்துவதே இலக்கியம்' எனப் பொதுவாகக் கூறுவர். சமுதாயப் பாரமானி இந்தக் கருத்தினைத் தெளிவுறுத்தும் வகையில் டயானா Gorrøggärägår (Diana Laurenson) argårl loss?. 'இலக்கியம் மனிதனுடைய கவலைகலந்த ஆர்வத்தையும், எதிர்கால இலட்சிய உணர்வுகளையும் சித்திரிக்கிறது. இந்த நோக்கில் சமூக உந்துதல் சக்திகளுக்கேற்ப மனித இயல்புகளில் இருந்து உண்டாகும் எதிர் விளைவுகளை, எதிர்ச்செயல்களை -9lajl803gjih fgp5fruti Ling lorraf (Socia! Barometer) இலக்கியம் எனலாம். சமுதாயப் பயன் மதிப்புகளை (Values) யும் உணர்ச்சி களையும் பிரதிபலிப்பதனால், இலக்கியத்தை ஒரு சமுதாயப் பாரமானி எனக் கூறுதல் பொருந்தும்." இவ்வாறு இலக்கியத்தைப் பொதுப்படையாக ஒரு சமூக நிறுவனமாக விளக்குவது சமூகவியல் நூலாரின் வழக்கமாகும். எதிர்காலத்திய இலக்கியம் அறிவியல் சிந்தனை வளர்ச்சியின் பின்னணியில், இலக்கியத் திற்கு இக் காலத் திறனாய்வாளர்களால் புதிய விளக்கம் தரப்படுகிறது. அது ஒருவகை பரிசோதனை முயற்சி'யாகவே தோன்றுகிறது. இவர்களுடைய கருத்துகளைத் தொகை வகைப் படுத்தினால், அவ்விளக்கங்களை மூன்று கோணங்களில் காணவும் காட்டவும் இயலும், அவை : 1. Épůųstwa saråsih Genetic Interpretation 2. (Ip(5studi esit#sih Aesthetic Interpretation 8. GlættsbQLstró56fluid offsiréâth Semantic interpretation என்பனவாகும். பிறப்பு நிலை விளக்கமாவது இலக்கியம் யாரால் படைக்கப்படுகிறது எனும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவதாகும். தொழில்நுட்ப அறிவின் எல்லைகள் விரிந்துவிட்டமையால், கணிப்பொறிகளே’ (Computers) இலக்கியத்தைப் படைக்கும் காலம் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/32&oldid=751146" இலிருந்து மீள்விக்கப்பட்டது