பக்கம்:இலக்கியக் கலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் ஒரு வரையறை 17 என்று, மன்ரோ சி. பியர்ட்ஸ்லி எனும் அறிஞர் அறிவிக்கின்றார்." இதனால் மனிதனால் படைக்கப்படுவது இலக்கியம்’ எனும் நிலைமாறத் தொடங்கிவிட்டது. கி. பி. 2000த் திற்குள்ளாகவே, இத்தகைய வியப்பூட்டும் புதுமைகள் நம் நாட்டிலும் நடை பெறலாம். இலக்கியம் உணர்வுக்கு விருந்திட வேண்டுமாதலின் கணிப்பொறியால் ஆகாத செயல். தோற்றநிலை இலக்கியம், என்பது மனிதனால் படைக்கப் பட்டதா? அல்லது கணிப்பொறியைப்போன்ற இயந்திரத்தால் படைக்கப்பட்டதா? என்பதைத் தெரிவிக்கும் விளக்கமாகும். இந்த விளக்கம், நம் நாட்டிற்கு வருங்காலத்தில் தேவைப்படலாம். 'இலக்கியம் எனும் சொல் பொதுவாகச் சிந்தனைக்கு விருந்தாக அமையும் வகையில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் அனைத் தையும் சுட்டுவதாகும். இப்போது நிலைக்குப் புறம்பாக இலக்கியப் படைப்புகள் போற்றப்படுகின்றன. பொது நிலையில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்ட, படைப்பு அல்லது ஆக்கம்’ எனும் அடிப்படையைப் பெற்று இலக்கியம் எனும் தொடரை வழங்குகிறோம். முருகியல் விளக்கம் படைப்பிலக்கியத்தின் சிறப்பியல்புகள் பல. அவற்றுள் இரண்டினை 'முருகியல் விளக்கம் முதன்மையாகக் கொண்டு அமைகிறது. கற்பனைநயமும் எடுத்துரைக்கும் முறையில் கலையழகும் இணைந்து இயங்குகின்றபொழுது, படைப்பிலக்கியம் கவர்ச்சிமிகு கலையழகைப் பெறுகிறது. இதனோடு அழகான பொருள் வற்றாத இன்பவூற்று' எனும் கருத்திற்கேற்பப் படிப்பவரை மகிழ்விக்கவும் செய்கிறது. இந்த இருவகை இயல்புகள் படைப்பு இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே முருகியல் நோக்கமாகும். சொற்பொருளியல் விளக்கம் மூன்றாவதாக இலக்கியத்திற்குத் தரப்பட்டுள்ள வரையறைச் 'சொற்பொருளியல்" விளக்கமாகக் கண்டோம். இது, இருவகைப் படும். அவை மறைமுகக் குறிப்பு, வெளிப்படைக்குறிப்பு என்பன. எடுத்துக்காட்டாகப் பத்துப்பாட்டில் சிறப்புற்று விளங்கும் நான்கு பாட்டுகளின் பெயர்களைக் கர்ட்டலாம். முதற்பாட்டின் பெயர் திருமுருகாற்றுப்படை என்பதாகும். இப்பாட்டில் இடம்பெறும் இ. -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/33&oldid=751157" இலிருந்து மீள்விக்கப்பட்டது