பக்கம்:திரு. வி. க.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 43

துர்வாசர் போன்ற முனிவர்கள் தம் சினத்தை அடக்க முடியாமல் அதனுடனேயே வாழ்ந்தார்கள். காட்டிற் சென்று இவற்றை அடக்க முடியாமல் போராடின. இவர்களைவிட நாட்டில், வீட்டிலிருந்தே இவற்றை வென்று வாழ்ந்தவரை ஏன் முனிவர் என்று கூறக்கூடாது? மேலே குறிப்பிட்ட முனிவர்கள் தாம் வீடுபேறு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு தவமியற்றினர். ஆனால், திரு. வி.கவோ தன்னலத்தால் எதுவுஞ் செய்தாரில்லர். பிறர் பிறப்பு அறத் தவமுயன்றனர். இவர் என்ன கருதினார் என்பதை இதோ அவரே கூறுகிறார். எனக்குப் பிறப்பு வேண்டும்; பிறப்பு பயன் கருதாத தொண்டுக்குப் பயன்படுதல் வேண்டும்” என்று அவர் தம் வாழ்க்கைக் குறிப்பில் கூறி விட்டு, வள்ளலாரின் அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்ற பாடலை எடுத்தாள்கிறார். வள்ளலாளின் சன்மார்க்கம்

நாட்டிடை, மக்களிடை, இல்லறத்தே இருந்து கொண்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்ட இப்பெரி யாரின் மனம் சமய வாழ்க்கையிலும் ஒரு புது வாழ்வை, சமரச சன்மார்க்க வாழ்வைக் கண்டது. சமரச சன்மார்க்கம் என்பதுபற்றி இராலிங்க வள்ளலார் விரிவாகப் பேசிச் சென்றுள்ளார். எனில், தமிழ்ப் பெரியார் இவ் வழியைப் புதிதாகக் கண்டார் என்று கூறல் பொருந்துமா என்று வினவலாம். சமரச சன்மார்க்கம் பற்றி வள்ளலார் கூறியது உண்மைதான் எனினும், அதன் அடிப்படை முற்றிலும் ஆன்மிக வாழ்வை மட்டுமே கொண்டது. மக்களிடைக் காணப்பெறும் பசி, துயரம் முதலியவற்றைப் போக்குதற்கு அடிகளார் சீவகாருண்யம் ஒன்றையே வழியாகக் கொண்டனர். தற்கால வாழ்வில், விஞ்ஞான யுகத்தில்,

1. வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/53&oldid=695571" இலிருந்து மீள்விக்கப்பட்டது