பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 தேசீய இலக்கியம் என்ன செய்தால் தீரும்? என்கிறான் மன்னன். அமைச்சர் கள் அவன் வினாவைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் மேல் தவறு இல்லை. இறந்தவர்களைப் பார்த்து என்ன செய்தால் இது தீரும்? என்று கேட்பதே சற்று வியப்பை அளிக்கிறது. உயிர் இருந்து நோயுடன் போராடும்பொழுது இவ் வினாச் சிறந்ததுதான்; ஆனால், உயிர் போய்விட்ட பிறகு இவ் வினாவிற்குப் பொருளே இல்லை. இறந்தவர்களை மீட்டும் உயிருடன் எழுப்பும் வித்தை, மனிதனுக்குக் கைவருகிறவரை இவ் வினாப் பயனற்றதுதானே! - எனவே, மன்னன் இறந்த கன்றை நினைத்துத் தான் 'என்ன செய்தால் தீரும்? என்று கேட்டதாக அமைச்சர்கள் நினைத்துவிட்டனர். உடனே அவ் வினாவிற்கு விடை கூறுமுகமாக அரசே! நடந்துவிட்ட இச் செயலுக்கு வருந்திப் பயன் இல்லை. இதனால் எவ்வித நன்ம்ையும் விளையப் போவதுமில்லை. அந்தணர்கள் பசு வதையைப் போக்க விதித்துள்ள கழுவாயைச் செய்வதே முறையாகும் என்று கூறுகின்றனர். மேலும். இவ்வாறு செய்வதே வழக்காகும் என்று கூறி, மன்னன் மனத்தைத் தெருட்ட முயல்கின்றனர். ஆனால், மன்னவன் என் செய்தால் தீரும் என்று கேட்டது மகனுடைய பாவத்தைப் போக்குதற்கன்று: பசுங்கன்றின் உயிரை மீட்பதற்கும் அன்று; அவன் வினாவெல்லாம், பசு பெற்று வருந்தும் துயரத்தைக் கருதியேயாகும். கொலை என்ற காரணத்தால் அமைச்சர்கள் அஞ்சினார்களேயன்றிப் பசுவின் துயரத்தை அவர்கள் பொருட்ப்டுத்தியதாகவே தெரியவில்லை. ஆறறிவு படைத்த அவர்கட்குப் பசுவின் அழுகுரல் காதில்கூட விழவில்லை; அதன் கண்ணிர் அவர்கள் கண்ணிலும் படவில்லை. ஆனால், மன்னவன் மனநிலை வேறாக உள்ளது. அரசனின் கடமைபற்றி அவன் ஒரு கருத்தைக் கொண்டுள்ளான். உயிர்களைக் காக்கும் மன்னவன். அவ்வுயிர்கட்கு உண்டாகும் ஐந்து வகையான துயரங்களைப் போக்குவதே கடனாகும் என்று கருதுகிறான்.