உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புதுவை (மை)க் கவிஞர் கும்பெனியிடம் வாணிகம் நடத்திப் பெருஞ்செல்வம் ஈட்டிய ஆனந்தரங்கம் பிள்ளையவர்களையும் நாடு மறவாது போற்றுவதற்குக் காரணம் அவர்கள் நல்வழி யால் ஈட்டிய பொருளை நல்வழியில் செலவிடுதலேயாகும்; (3) புதுவைப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் டாக்ட்ர் K. வேங்கடசுப்பிரமணியம் செயற்கரிய செய்த பெரியார்களுள் ஒருவராவார். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் A.இலக்குமணசாமி முதலி யார் காலத்தில்தான் அப் பல்கலைக்கழகம் உலகளாவிய புகழ்பெற்றது அவர் ஆற்றிய பலவேறு செயற்கரிய செயல் களால். அங்ங்ணமே, திருவேங்கடவன் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கோவிந்த ராஜுலு அவர்கள் காலத்திலும் மூன்றாவது துணை வேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி அவர்கள் காலத் திலும் அப் பல்கலைக் கழகம் பெரிய வளர்ச்சியை எழுதியது. முதல் துணைவேந்தரை விசுவகர்மாவுக்கு ஒப்பிட்டால் மூன்றாவது துணைவேந்தரை மயனுக்கு ஒப்பிடலாம். இவர்கள் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணிகளை நேரில் கண்டவன் நான். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இத்துணைவேந்தர் டாக்டர் K. வேங்கடசுப்பிரமணியத்துடன் பழகி அவர் ஆற்றிய, ஆற்றிவரும் அரும் பணிகளை நோக்கிய வரையில் விசுவகர்மாவையும், மயனையும் சேர்த்து ஒரு வடிவம் தந்தால் அந்த வடிவத்திற்கு ஒப்பிடலாம். புதுவைப் பல்கலைக் கழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு இவர் ஆற்றிவரும் அருஞ்செயல்களாலே இது தெளிவாகும்; (4) பாரதியார் சிறு வயதிலிருந்தே என் உள்ளங் கவர்ந்த மாபெரும் கவிஞர். பாடல்கள் படிப்பதற்கு எளியனவாக இருப்பினும், வயதிற்கேற்பவும் அநிபவத் திற்கு ஏற்பவும் அவை நமக்குப் புதிய புதிய அது பவத்தைத் தருவதை உணரலாம். நான் உணர்கின்றேன். என்னுடைய 20-30 வயதுக் காலத்தில் நான் இவற்றைப் படித்ததனால் தமிழின்மீது ஆராக் காதல் கொள்ள