உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - புதுவை (மை)க் கவிஞர் நான் உன்னை அன்றிஇலேன் கண்டாய் நாரணனே ! நீ என்னை அன்றி இலை.24 என்ற திருமழிசையாழ்வார் திருமொழியையும், புவியும் இருவிசும்பும் நின்அகத்த நீ.என். செவியின் வழிபுகுந்து என்வுள்ளாய் அவிவு இன்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யார் அறிவார்.25 என்ற சடகோபரின் திருவாக்கையும், தந்ததுன் றன்னைக் கொண்ட தென் - றனனைக. சங்கரா ஆர்கொலோ சதுரர் ? அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது.நீ பெற்றதொன் றென்பால்" என்ற மணிவாசகப் பெருமானின் மணிவாக்கையும் நினைவுகூரச் செய்துவிடுகின்றது. சக்தியைப்பற்றி மேலும் சில செய்திகளை அறிந்து கொண்டால் பாரதியாரின் சக்தி பற்றிய பாடல்களில் மேலும் தெளிவு பெறலாம். இறைவனது மேலான சக்தி (பராசச்தி) உலகத்தை நோக்கும்போது அதன் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிற்பட முற்படும்; அதன்ை ஆதிசக்தி என்று வழங்குவர். உலகத்தை இயக்கும். 24. நான். திரு. 7 25. பெரி. திருவந், 75 26. திருவா. கோயிற்றிருப்பதிகம்-10