உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் & என்று பராசக்தியின் மீது தாம்கொண்டுள்ள நம்பிக் கையை-மனவுறுதியைத் - தெளிவாக்குகின்றார். தம் உடல் பொருள் ஆவியனைத்தையும் சக்தி தேவிக்கே சமர்ப்பணமாக்கி விடுகின்றார்." இன்னொரு பாடலில், சக்திசக்தி வாழி என்றால் சம்பத் தெல்லாம் நேராகும், சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.' என்று சக்தி தேவியை வாழ்த்தி, தம்மைச் சக்திதாசன்' என்று கூறிக்கொள்ளுகின்றார். பிறிதொரு பாடலில்," சக்தியையும் தம்மையும் ஐக்கியப் படுத்திக்கொள்ளு கின்றார். இன்ப மாகிவிட்டாய் - காளி ! என்னுளே புகுந்தாய் ! பின்பு நின்னை யல்லால் - காளி ! பிறிது நானும் உண்டோ? என்ற பாடலில் இக்கருத்தினைக் காணலாம். இது, உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்’ என்ற பெரியாழ்வார் வாக்கையும், 20. டிெ. 24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 21. டிெ. 25. சக்தி திருப்புகழ்-9 22. டிெ 30, காளிப் பாட்டு-2 23. பெரியாழ். திரு. 5, 4 : 5 7-6