உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 49 என்று காட்டுவார், கதைகள் குழந்தைகட்கு இன்பந்தரக் கூடியவை; வளர்ந்தவர்களும் முதியோர்களும்கூட கதை களில் மனத்தைப் பறிகொடுப்பர். பண்டிருந்தே கதைகள் மானிட வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தைப் பெற் றுள்ளன. நமது நாட்டில் கதை சொல்லுவது ஒரு கலை யாகவே மதிக்கப் பெற்று வந்துள்ளது. சிறு குழந்தையாக இருந்த பொழுது சிவாஜி அன்னையின் மடியிலிருந்து கொண்டே பல கதைகளைக் கேட்டதாக வரலாற்று மூலம் அறிகின்றோம். திருவிழாக் காலங்களிலும், பிற சமயங் களிலும். திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் புராணச் சொற்பொழிவுகள் செய்யப்பெற்று வருவதை இன்றும் காணலாம். கதாகாலட்சேபங்கள் செய்வது இன்றும் ஒரு சிறந்த கலையாகப் போற்றப் பெறுகின்றது. பாமர மக் களுக்கு உயர்ந்த சமய உண்மைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் கற்பிப்பதற்கு இக்கதைகள் பெரிதும் உதவுகின்றன. எத்தனையோ பேர் இக் கதைகளைக் கேட்டு உள்ளத் தெளிவு அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின் றனர். இங்ங்னம் கவிஞர் கண்ணம்மாவின் மடியிலிருந்து கொண்டே கதைகளைக் கேட்கின்றார். கண்ணம்மா உளவியல் துட்பங்களை நன்கு அறிந்தவள். வயதிற்கேற்ற குழந்தைகளின் மனப்பான்மை யும் உளப்போக்கும் விடுப்பார்வமும் மாறிக்கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்தவள். ஆகவே, ஒரு குழந்தைக் கல்வி நிபுணர்போல் குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு கதைகள கூறுவாள. இன்பமெனச் சில கதைகள் - எனக் கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள துன்பமெனச் சில கதைகள் - கெட்ட - தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள 7–4