உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தடித்த எழுத்துக்கள்'டாக்டர் ந. கடிகாசலம் 'முதுநிலை ஆய்வாளர் பன்மொழிக் கல்வித் துறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை - 600 113 அணிந்துரை பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர்: கனவிலும் பிறர்க்குத் தீங்கு நினையாதவர். பயன்_கருதாது தமிழ்த்தொண் டாற்றி வருபவர். எளிய தமிழில் அறிவியல் நூல்களைத் தருபவர். அன்னார் புதுவைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவே புதுவை (மை)க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்: ஒரு கண் ணோட்டம்' எனும் இந்நூலாக உருவெடுத்துள்ளது. கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பற்றிய இந்நூலில், மாபெரும் தேசியக் கவிஞரை ஏழு நோக்கில் கிளிண்கிறார் பேராசிரியர். இது, சிர் ஐசக் நியூடன் சூரிய ஒளியில் காணும் ஏழு நிறமாலை (SPECTRUM) போல் (ப. 3) என்று பேராசிரியரே குறிப்பிடுகின்றார். - - பேராசிரியர் அவர்களின் நேர்மையை இங்குப் பாராட் டியாக வேண்டும். புதுவைப் பல்கலைக் கழகத்தில் அறக் கட்டளைச் சொற்பொழிவு ஆற்ற அவர் ஒப்புக்கொண்ட தற்கு ஒரு காரணம்: "இத்தகைய அறக்க்ட்டளைகளால் பல்கல்ைக்கழகங்கள் கரும்பு தின்னக் கூலி கொடுக்கின்றன. (ப. 1). அறிவியலை அநுபவித்துக் கொண்டிருந்த என்னைத் திசை திருப்பித் தமிழுக்கு வரச் செய்தவை இவர்தம் பாடல்கள்ே. இதனால், வித்துவான், எம்.ஏ., பிஎச். டி., வரை படிக்கச் செய்து தமிழையே என் பிழைப் பிற்கு வழியாக அமையச் செய்தன (ப. 3). நூலின் இறுதியில், என் மனத்திலுள்ள கருத்துகளை ஏதோ ஒரு வகையில் வடித்துக் காட்டினேன். காட்டாதவை ஏரர்ள் மாக உள்ளன (ப. 102) என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு உள்ளத்தில் உள்ளதை - உண்மையை - வெளிப்படை யாகக் கூறிவிடுவதே பேராசிரியரின் சி ற ப் பா ன பண்பாகும். r 'பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேனும் என்ற பேராச்ை கொண்ட பாரதியார் பாட்டுக்கு ஒரு புலவர் என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆணித்தரம்ாகப் பேராசிரியர் நிலைநிறுத்துகிறார். பாரதியின் தேசிய கீதங்கள், ஆங்கில மொழியி'லுள்ள