உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. புதுவை (மை)க் கவிஞர் என்ற பாடற்பகுதிகளில் எல்லாம் சக்தி மயம்' என்ற கருத்து தெளிவாவதைக் காணலாம். மேலும், விண்டு ரைக்க அறிய அரிதாய் விரிந்து வான வெளியென நின்றனை: அண்ட கோடிகள் வானில் அமைத்தனை: அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை: மண்ட லத்தை அணுஅணு வாக்கினால் வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே ! நினைக் காளியென் றேத்து வேன்.8 என்று அகிலத்தின் காட்சியைத் தொகுத்துக் காட்டுவர். இந்தக் காட்சி அடுத்து வரும் ஐந்து பாடல்களில் அற்புத மாக வகுத்துக் காட்டப் பெறுகின்றது. இந்த வியன் பெருவையத்தின் காட்சி கோமதியின் மகினம்’ என்ற பாடலிலும் நன்கு காட்டப் பெறுகின்றது. 'எல்லாம் சக்தி மயம் என்ற கருத்து வேறொரு கோணத்திலும் காட்டப் பெறுகின்றது. துன்ப மிலாத நிலையே சக்தி; தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி; அன்பு கனிந்த கனிவே சக்தி: ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி; 8. டிெ 34 மகாசக்தி வாழ்த்து-1