உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 77 இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, எண்ணத் திருக்கும் எளியே சக்தி; முன்புநிற் கின்ற தொழிலே சக்தி; முக்தி நிலையின் முடிவே சக்தி." . இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் சக்தியின் பரிணாமம் பல்வேறு விதமாகக் காட்டப் பெறுகின்றது . முத்தாய்ப்பாக, வீழ்வு தடுக்கும் விறலே சக்தி; விண்ணை யளக்கும் விரிவே சக்தி; ஊழிவினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி என்று கூறிக் களிக்கின்றார் கவிஞர். மேலும், பூதம் ஐந்தும் ஆனாய் - காளி! பொறிகள் ஐந்தும் ஆனாய்; போத மாகி நின்றாய் - காளி ! பொறியை விஞ்சி நின்றாய் 10 என்று அன்னை இந்திரியங்களாகவும் நிற்கின்றாள், அவற் றைக் கடந்தும் நிற்கின்றாள் என்று காட்டுவர். எல்லாத் தொழில்களும் செயல்களும் சக்தி தேவியின் அருளால்தான் நடைபெறுகின்றன என்று நம்புபவர் பாரதியார். . 9. தோ. பா. 21. சக்தி-1 10. டிெ 30. காளிப் பாட்டு-1