உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதுவை (மை)க் கவிஞர் سسسسس-* என்று பட்டிக்காட்டான் ஒருவன் பாரதி பாட்டைப் பண்ணோடு பாடக் கேட்டதனால் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயலலாம், இப்பாடலில் வரும் இயற்கைக் காட்சிகள் நெஞ்சைப் பிணிக்கும் பான்மையவை. பாட்டு, ஆன்ற தமிழ்ப்புலவீர் கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறிரோ? என்று முடிகின்றது. இந்த வேதாந்தப் பொருள் 'உள்ளுறை'யாகவும் இருக்கலாம்; ஆன்மிகமான பொருளா கவும் அமையலாம், காலச் சுருக்கம் கருதி இதில் இறங்க வில்லை. . பொதுவாக, பாரதியின் பாடல்களில் சொல்லுக்குச் சொல்லழகு ஏறுவதையும்; கவி துள்ளும் மறியைப்போல் துள்ளுவதையும்; கல்லும் கனிந்து கனியாவதையும்; பசுங்கன்றும் பால் உண்டிடாது கேட்பதையும் காணலாம்: இவர் பாடல்களில் கிளியும் குயிலும் கூவுவதையும்; மயில் குதித்துக் குதித்து நடனம் ஆடுவதையும்; வெயிலும் மழையும் தோன்றுவதையும்; மலர்கள் மணம் வீசுவதையும் கண்டு மகிலாம். பாடல்களைப் பயிலும் போது தேனும் தினைமாவும் பாலில் உண்ணலாம்; தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம்; கானக் குழலிசையும் கேட்கலாம்; களிவண்டு பாடுவதையும் செவிமடுக்கலாம். பாவின் நயமெல்லாம். யானும் பகர வல்லேனோ? ஆவின் பாற்சுவையை-நாழி அளந்து காட்டிடுமோ?" 10, கவிமணி : பாரதியும் பட்டிக்காட்டானும்-23