உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 13 பறக்கவிட்டு காவிய முறையில் படைத்த அழகான சொல்லோவியங்களில் இது தலை சிறந்தது. இதில் பாரதியாரின் கனிந்த கவிதை ஆற்றலும், நெஞ்சை அள்ளும் இசையின் ஆற்றலும் ஒருங்கே சிறந்து வற்றாத ஊற்றிலிருந்து பொங்கும் அமுத வெள்ளமாய்ப் பெருக் கெடுத்திருப்பதைக் கண்டு மகிழலாம். குயில் பாட்டில் பாரதியின் நடை இதற்குமுன் தமிழ் இலக்கியம் கண்டிராத ஒரு வெற்றியாக அமைந்துள்ளது. பாட்டு முழுதும் ஒரே இனிமையான வாக்கு ஒரே கவிதை வெள்ளம்; வேகமும் நயமும் எந்த இடத்திலும் குறையவில்லை. என் அருமைப் பேராசிரியர் திரு. சேஷ அய்யங்கார் (நான் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றபோது வேதியியல் பேராசிரியர்) குக்குக்கூ, குக்குக்கூ, குக்குக்கூ...' என்று குயில் கூவுவது போல் குரல் எழுப்பி, காதல், காதல், காதல் காதல் போயின், காதல்போயின் சாதல், சாதல், சாதல் என்ற அடிகளையும் இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பது பாடல் பகுதிகளையும் குக்குக்கூ என்ற ஒலி வருமாறு குயில் கூவுவதுபோல் பாடி மகிழ்வார்; கேட்போரையும் மகிழ்விப்பசர் (1936-39). குக்குக்கூ; குக்குக்கூ என்ற குயிலின் பாட்டுதான் கவிஞரின் சிந்தையில் தேங்கி சிந்தனையில் மலர்ந்து குயில் பாட்டு’ என்ற கவிதையாக வடிவங்கொள்ளுகின்றது. இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டு குயில் பாட்டைப் படித்து அநுபவிக்க வேண்டும். குயில் பாட்டி'லே-காதல் கொப்பு எரிக்குதடா செயல்ம றந்தேனடா-லாகிரி சிரசிற் கொண்டதடா! (18)