உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 புதுவை (மை)க் கவிஞர் குறைந்த பகுதிகள் மிகக் குறைவு. கல்விச் செருக்குடைய புலவர்களும் களிக்கும் படியான கற்பனை முறைகளை யும் அணிகளையும் கையாண்டு அவற்றைத் தெளிவாக்கிச் சுவைப் படுத்துவதில் பாரதியின் கைவண்ணத்தை இதில் கண்டு மகிழலாம். பாத்திரப்படைப்பில் ஒரு தனிப்பட்ட உயிர்த்தத்துவம் மிளிர்வதைக் காணலாம். துரியோதனன் திய குணங்களையுடையவனாக இருந்த போதிலும் அவனை வெறும் அயோக்கியனாகக் கவிஞர் படைக்க வில்லை. இங்குத் துரியோதனன் தனது மறத்தொழிலுக்கும் பொறாமைக்கும் ஓர் அரசியல் தத்துவத்தை வைத்துக் கொள்வதைக் காண்கின்றோம். - மன்னர்க்கு நீதி ஒருவகை-பிற மாந்தர்க்கு நீதிமற் றோர் வகை என்பது அவன் கொண்ட சித்தாந்தம். இஃது ஒரு சிறந்த காவியம் என்பதை, அன்னை பாஞ்சாலி-சபதம்' அறைதல் கேட்டேனடா! முன்னைக் கதையெல்லாம்-கண்ணின் முன் நடந்த தடா! (13) என்ற உரைகல்லில் கண்டு மகிழலாம். என் அரிய நண்பர் (அமரர்) திருலோக சீதராம் இதனை அப்படியே ஒப்பித்துக் காலட்சேபம் செய்யும் போது நம்மை பாரத காலத்திற்கே கொண்டு போவதை நினைவுகூர முடிகின்றது. குயில் பாட்டு : இந்தப் பாட்டு பாரதியாரின் புதுச்சேரி நண்பர் கிருட்டிணசாமி செட்டியாரின் மாஞ்சோலையில் முகிழ்த். தாகக் கூறுவதுண்டு. பாரதியார் தம் கற்பனை ஆற்றலைப்