பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மொஹெஞ்சொ - தரோ


துண்டு. இருதயம் போன்ற வடிவங்கள் முதலியவற்றைச் செய்தனர்; இவற்றைப் பொன், வெள்ளி, செம்பு இவற்றால் ஆன நகைகளிற் பதித்து வந்தனர். இவ்வாறு செய்யப்பட்டு வந்த வேலை வியப்பூட்டுவதேயாகும்.

மீன் பிடித்தல்

மொஹெஞ்சொ-தரோ நகரம் சிந்து யாற்றின் கரை மீதே இருந்த நகரமாதலாலும், ஹரப்பா ராவியாற்றின் அண்மையில் இருந்ததாதலாலும், அவ்வெளிகளில் வாழ்ந்த மக்கள் மீன் பிடிக்குந் தொழிலையும் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர் என்பது தவறாகாது.அங்கு மீன் பிடிக்கப் பயன்பட்டசெம்பு-வெண்கலத் தூண்டில்கள் பல கிடைத்துள்ளன. மீன் பிடிக்கும் வலைகளின் ஒரங்களிற் கட்டப்பட்ட மண் உருண்டைகளும் கிடைத்துள்ளன. ‘மொஹெஞ்சொ-தரோ மக்கள் மீன் உணவைப் பெரிதும் பயன் படுத்தினர் என்று கூறலாம்’ என்று மக்கே போன்ற ஆராய்ச்சியாளர் கூறுவதிலிருந்து, மீன் பிடிக்குந் தொழில் அக்காலத்தில் சிறப்புடையதாகக் கருதப்பட்டு வந்தது என்பது வெளியாம்.[1]

வண்டி ஒட்டுதல் .

சிந்து வெளியில் பெரும்பாலும் மாட்டு வண்டிகளே மிக்கிருந்தன. அவற்றை ஒட்டுவதற்கென்றே வண்டிக்காரர் பலர் இருந்தனர். ‘சாட்டை’ இருந்தது. வண்டி கூண்டு உடையது. இக்குறிப்புகளை உணர்த்தும் விளையாட்டு மண் வண்டி ஒன்று ஹரப்பாவில் கிடைத்தது. ஹரப்பாவில் கிடைத்த விளையாட்டு வண்டி செம்பாற்செய்யப்பட்டது. வண்டி ஒட்டியின் முகம் வட்டமானது: மூக்குத் தட்டையாகவும் ஒரளவு உயர்ந்தும் இருக்கிறது; கூந்தல்


  1. பண்டைத் தமிழகத்தில் அத்தொழில் சிறப்புற நடந்து வந்தது உலர்த்திப் பக்குவப்டுத்தப்பட்ட ‘மீன் உணங்கல்’ வெளி நாடுகட்கு அனுப்பப்பட்ட செய்தி மதுரைச் காஞ்சி முதலிய தொன்னூல்களால் அறியக் கிடக்கிறது.