பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள்-தொழில்கள்-கலைகள்

173

பொறிக்கப்பட்டுள்ளன[1]; எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்முத்திரைகளில் காணப்படும் குறிப்புகளைக்கொண்டே அப்பண்டை மக்கள் மொழியையும் எழுத்துக்களையும், சமயச் செய்திகளையும், ஓவியம், சிற்பம், செதுக்கு வேலை இன்ன பிறவற்றையும் அறிய இடம் ஏற்பட்டுள்ளது எனின், இவற்றைத் தயாரித்த பேரறிஞர் நம் போற்றுதற்குரியரே யாவர் அல்லரோ? பல முத்திரைகள் வெண்கல் கொண்டு செய்து சூளையிடப்பட்டு மெருகிடப்பட்டவை. இவை 1 செ. மீ. முதல் 6 செ. மீ. வரை சதுரமாக உள்ளன. சில 2 செ. மீ. முதல் 3 செ.மீ. வரை சதுரமாக இருக்கின்றன. சித்திரங்கள் மட்டுமே கொண்டவை சில; சித்திரங்களோடு எழுத்துக் குறிகள் கொண்டவை பல. இவை அனைத்தும் இரம்பம் கொண்டு ஒழுங்காக அறுக்கப்பட்டவை; சிற்றுளியாலோ - கத்தியாலோ ஒழுங்குபெறச் செதுக்கப்பட்டவை; பின்னரே மெருகிடப்பட்டவை. இவை இவ்வாறு தயாரிக்கப் பட்ட பிறகே, இவற்றின்மீது உருவங்களும் எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் இவை, ஏதோ ஒருவ்கைப் பொருள் மேலே பூசப்பட்டுச் சுடப்பட்டிருக்கின்றன.அப்பண்டைக்காலத்தில் இத்துணை முறைகளும் ஒரு முத்திரை செய்யக் கையாளப்பட்டன எனின், முத்திரைத் தொழில் ஈடுபட்டிருந்த மாந்தர் தம் தொழில் அறிவையும் கலையுணர்வையும் என்னென்பது!

சங்குத் தொழில்

அக்காலத்தவர் சங்கைக்கொண்டு பலவகை நகைகளையும், நகைகளிற்பதிக்கும் சிறு பதக்கங்களையும் பிற பொருள்களையும் செய்துகொண்டனர் சங்கை அறுத்து, அரம் செதுக்கும் கருவி முதலியவற்றைக்கொண்டு பல்சக்கரம், சதுரத்துண்டு, முக்கோணத்


  1. ; இத்தகை செம்பு நாணயங்கள் பல திருநெல்வேலிக் கோட்டத்திற் கிடைத்துள்ளன. அவற்றின் விவரம்.'சிந்து வெளி மக்கள் யார்?’ என்னும் பகுதியிற் காண்க.