உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 19 தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வானர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்.எங்கள் தாய்." என்று பெருமையுடன் பேசிக் களிக்கின்றார். இன்னும், பாரத வீரர் மலிந்த நன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன் னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்த நன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடு பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே11 என்று பாடிப் பரவி நம்மிடம் நாட்டுப் பற்றை ஊட்டு கின்றார். இத்தகைய நாட்டுக்கு, வந்தனை கூறி மனத்தில் இருத்தி வாயுற வாழ்த்தேனோ-இதை வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கே னோ?12 என்கின்றார். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்’ 10. டிெ. எங்கள் தாய் - 1 11. டிெ. எங்கள் நாடு-2 12. தே. கீ. நாட்டு வணக்கம்-1 13. சுய சரிதை-26