உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புதுவை (மை)க் கவிஞர் யிலிருப்பினும் உயர்ந்த சிந்தனையையுைடய பாடல்கள் மற்றைய மொழிகளில் பெயர்க்கப் பெற்று நாட்டின் பொதுச் சொத்தாக ஆக்கப் பெறுதல் வேண்டும். தமிழ் மொழியில் திருக்குறள் இருப்பினும் அது உலக மொழிகளி லெல்லாம் பெயர்க்கப் பெற்று உலகப் பொதுச் சொத்தாகி விடவில்லையா? அது போலவே, பாரதியாரின் பாடல்கள் மொழி பெயர்ப்புகளின் மூலம் நாட்டின் பொதுச் சொத் தாக ஆக்கப் பெறுதல் வேண்டும். குறிப்பாகத் தாயின் மணிக்கொடி பாரீர்” என்ற பாடல் இந்திய மொழி களனைத்திலும் பெயர்க்கப் பெற்று, எங்கும் இசை ஏற்றம் பெறுதல் வேண்டும்; மைய அரசு இதில் முயற்சி எடுத்துச் செயற்படுதல் வேண்டும். நாட்டுப்பற்றை மக்கட்கு ஊட்டும் முறையில் பல பாடல்கள் அமைந்துள்ளன. மக்களிடையே விடுதலை யுணர்ச்சியை எழுப்புவதில் இவை பெரும் பங்கு கொள்ளு. கின்றன. முதலில் நாட்டின் பழம் பெருமையைப் பேசி இந்த உணர்ச்சியை எழுப்ப முனைகின்றார் கவிஞர். பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு." என்று பல்லவியாகத் தொடங்கித் தோடிப் பண்ணில் இசையை எழுப்புகின்றார். ஞானத்திலும், பரமோனத்தி லும், கானத்திலும், வீரத்திலும், நெஞ்சில் ஈரத்திலும், நன்மையிலும், உடல் வன்மையிலும், ஆக்கத்திலும், தொழில் ஊக்கத்திலும், உயர் நோக்கத்திலும், உளத் திண்மையிலும், துண்மையிலும், உண்மையிலும் உயர்ந்த நாடல்லவா ? வரலாற்றறிஞர்களும் பிறந்த நாள் அறிய மாட்டாத பழந்தாய் என்று கூறுபவர். 9. தே. கீ, 4, பாரத நாடு - 1