உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 17 நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று நித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு." என்று தமிழ் நாட்டிற்கு எல்லை வகுத்தது, வட வேங் கடம் தென்குமரி என்ற பண்டைய தொல்காப்பிய மரபை யொட்டியேயாகும். ஆனால் அடிமைத் தளையை அகற்ற வேண்டும் என்று அவாவி நிற்கும் கவிஞர் இந்திய ஒருமைப்பாட்டையே நாடுகின்றார். இதனால் குழந்தைப் பாடலிலேயே பிஞ்சு மனங்களுக்கு, வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா' கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!' என்று இந்திய நாட்டின் வழக்கு எல்லையை வரைந்து காட்டுகின்றார். பிறிதோர் இடத்தில், பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி: என்று இந்த எல்லையைக் குறிப்பிடுகின்றார். எனவே பாரதியின் பாரதப் பாடல்கள் தமிழ் மொழிக்குப் புதியவை; தமிழர்களிடம் அகன்ற நோக்கை - விரிந்த பார்வையை - உண்டாக்கக் கூடியவை. எந்த மொழி செந்தமிழ் நா-5 பாப்பா பாட்டு - 13 பாரத தேவியின் திருத்தசாங்கம் - 2 ‘தேசிய கீதங்கள் என்ற தலைப்பிலுள்ள பல பாடல்கள். 7--2