உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J6 புதுவை (மை)க் கவிஞர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே' என்று நாட்டை வணங்கிப் போற்றுகின்றார். தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்ற கொடி வணக்கப் பாட்டில், பல்வேறு காரணங் களால் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்று கூடும்படி அறைகூவி அழைக்கின்றார்; ஒரு கொடிக் கீழ் வந்து திரளு மாறு பணிக்கின்றார். இதனை அக நாட்டார் அனை வருக்கும் விடுக்கும் அழைப்பாகக் கொள்ளலாம். தமிழ் மொழியைக்-கன்னித் தமிழாகவே-ஆற்றல் மிக்க மொழி யாகவே-காணும் தமிழ் மரபில் வந்த கவிஞர், பாரத மாதாவையும் 'கன்னிகை"யாகவே காண்கின்றார். பாரத மாதாவை, முப்பது கோடி முகமுடை யாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனிற் சிந்தனை ஒன்றுடை யாள்" என்று படைத்துக் காட்டும்போது வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) காணும் கவிஞரின் பாரதப் பண்மைக் காண முடிகின்றது. மேலும் அறுபது கோடி தடக்கைகள் உடையவள் என்றும், இக்கைகளால் அறங் கள் நடத்துவாள் என்றும் மொழிகின்றார். 2. நாட்டு வணக்கம்-1 3. தாயின் மணிக்கொடி-பல்லவி. 4. எங்கள் தாய்-3