உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 57. பின்னர் கண்ணன் பிறப்பைப் பற்றிக் கூறுபவர், பிறந்தது மறக்குலத் தில் - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்கு லத்தில்: சிறந்தது பார்ப்பன ருள்ளே -சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு என்கின்றார். பிறப்பால் கடித்திரியன்; வளர்ப்பினால் யாதவகுலத் திலகன். ஆயினும், அவனை அந்தணர்கள் தாம் அதிகமாகப் போற்றுகின்றனர். அவன் அருளிய பகவத் கீதை பார்ப்பனர்களிடத்தில்தான் அதிகச் செல் வாக்கு பெற்றுள்ளது. அதிகம் பேர் அதைப் படிக்கா விடினும் அதைப் பற்றிப் பேசுவதில் குறைவில்லை! சாதாரணப் பேச்சில் கூட அதனைச் சிதறவிடுவர். செல்வ நிலைக்குக் குறைவில்லை; சேமித்து வைத்த பொன்னுக்கும் அளவில்லை. கல்வியில் சிறந்தவன். அன்னமாகி அவனிக்குத் திருமறைகளை அருளிய அப்பன். சாந்தீபினி முனிவரிடம் கல்வி பயின்றான் என்பது உல கோர் நடையையொட்டிதான். இவன் அருளிய கீதையின் இனிமையும் சொல்லி முடியா. எல்லாம் வல்ல இக்கண் ணனிடம் கொஞ்சம் பைத்தியமும் தோன்றுவதுண்டு. என்ன பைத்தியம்? நல்வழி செல்லு பவரை - மனம் நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு என்பதுவே அது. துரியோதனாதியரிடம் அக்கிரமங்கள் தலையெடுக்கச் செய்ததும், பாண்டவர்களைப் பல்வேறு வகையில் துன்பங்களால் வாடச் செய்ததும் இவன் புரிந்த லீலா விநோதங்கள்! இன்றும் நல்லவர் வாடு வதும் அல்லவர் அவனியில் மேலோங்குவதும் இவன்