உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம்

5




சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை, எந்நாளும அழியாத
மாகவிதை'

என்ற எண்ணற்ற புதுமையான கவிதைகளைத் தமிழுல கிற்கு அளித்துள்ளார். இவர் பாடிக் குவித்த பாடல்களை (1) தேசிய கீதங்கள், (2) தோத்திரப் பாடல்கள், (3) வேதாந்தப் பாடல்கள், (4) பலவகைப் பாடல்கள், (5) தனிப் பாடல்கள், (6) சுயசரிதை, (7) கண்ணன் பாட்டு, (8) பாஞ்சாலி சபதம், (9) குயில்பாட்டு (10) வசன கவிதை என்று பத்து வகையாகப் பிரித்து நோக்கலாம். இதனைத் தெளிவாக அறிவிக்கும் முறையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ைையவர்கள் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா' என்று பட்டிக்காட்டான் ஒருவன் வாயில் வைத்துப் பேசிப் போந்தார். இந்தப் பாடல் பாரதியின் பாடல்கட்கு ஒரு சிறந்த உரை கல்லாகத் திகழ்கின்றது. பாரதியின் பாடல்களை வகைக் கொன்றிரண்டாக இந்த உரைகல்லின் மூலம் நோக்கு வோம். தேசிய கீதங்கள் : இந்தத் தொகுப்பில் 53 பாடல்கள் காணப்படு கின்றன. பாரதி இயற்றிய தேசிய கீதங்கட்கு ஒர் உயர்ந்த 5. த. பா. வேங்கடேச ரெட்ட பூபதி-(2)-3 6. மலரும் மாலையும் - பாரதியும் பட்டிக்காட் டானும் - 1 - 7. எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை வெளியிட்ட "மகாகவி பாரதியார் கவிதைகள்' என்ற நூலில் கண்டபடி இவை எடுத்துக்கொள்ளப் பெற்றன.