உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 7 எழுச்சி', 'பாரத தேவியின் திருத்தசாங்கம்’ என்ற மகுடங் களைப் பெற்ற பாட்டுகளிலும், வேறு பாடல்களிலும் இனிய ஓசைப் பெருகும் கவிதை இரசமும் பொங்கும்படிப் பாடியிருப்பது நோக்கத் தக்கது. தேசிய கீதங்களின் இசைத் தன்மை ஒப்புயர் வற்றது. தோத்திரப் பாடல்கள் : இதில் 78 பாடல்கள் உள்ளன. தேசிய கீதங்களை விட அதிக ஆர்வத்தையும், கருத்துச் செல்வத்தையும், கவிதைச் சுவையையும் மட்டில்லாத பக்திப் பான்மையையும் பெற்றவை பாரதியின் தோத்திரப் பாடல்கள். கண்ணன், முருகன் போன்ற தெய்வங்களைப் பற்றிப் பலப்பல புது முறைகளில் விதம்விதமாகப் பாடியிருக்கும் கீதங்கள் மனத் ைதயுருக்கும் தன்மையுடையவை. எடுத்துக் காட்டாக, ஒன்றைக் காட்டுவேன்; கோவிந்தனைப் பற்றியது இது. எளியனேன் யானெனலை எப்போது போக்கிடுவாய் இறைவனே ! இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே, வரம்பில் வான வெளியிலே கடலிடையே மண்ணகத்தே - வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு நின்னொடுநான் கலப்ப தென்றோ? இதைப் படிக்கும் போது நம்மைப் பக்தியின் கொடு முடிக்கு இட்டுச் சென்று விடுகின்றது. ஆழ்வார் பாசுரங் களை நினைக்கச் செய்து ஆரா அமுதமாக இனிக்கச் செய்கின்றது. 8. தோ பா. கோவிந்தன் பாட்டு- 2