பக்கம்:இலக்கியக் கலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 " இலக்கியக் கலை வந்தமையாற்றர்னே இன்றும் நின்று நிலவுகின்றன! இவர்கள் அனைவருடைய திறனாய்வு என்கிற உலையிற் பெய்துங்கூட இவை தப்பி வெளிவந்துள்ளன. திருக்குறள் போன்ற இலக்கியங்கள். தமிழ்நாட்டாரேயன்றி, வேற்றுநாட்டாரும் ஆய்ந்து சுவைத்துச் சுவைத்து இன்புற்றவை அல்லவோ? அவர்களுடைய வேறான நாகரிகம், மனப்பண்பு என்ற சோதனைக் குழாய்களிலும் ப்ெய்யப்பட்ட இவ்வரிய நூல்கள்தாம் 'வாழும் இலக்கியம் என்னும்.பெயரைத் தாங்கி நிற்பவை. முன்ஒரு காலத்தில் குறளை வரவேற்ற ஒருவர் சிந்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கும் மாமருந்து' என்று கூறி மகிழ்ந்தார். அச்சொற் கள் இன்றும் உண்மையாகத்தாமே உள்ளன? இலக்கியத்தின் இத் தன்மையைத்தான் ஹ்யூம் என்ற பெரியார் பாராட்டுகிறார். 'காலாந்தரத்தில் பல்வேறுவகைப்பட்ட மக்கட்கும் இன்பம் ஊட்டி அவர்களுடைய குறுகியவும் பரந்தவுமான மனநிலைகளுக் கெல்ல்ாம் அழியாமல் நின்ற, அவர்களுடைய அறியாமை பொறாமை முதலியவற்றிலும் அழியாமல் நிற்கின்ற இலக்கியங் களின் பெரும்ை என்ன்ே?" என்று அவர் விளக்குகின்றார். - வாழ்க்காரணம் இத்தகைய இலக்கியங்கள் காலதேவனை வெற்றிகொள்வதன் இரகசியம் என்ன? வளர்ந்துகொண்டு செல்லும் மக்கட்பண்பிற்கு ஏற்பப்.புதிய கருத்துக்களை உள்ளடக்கி நிற்கும் இயல்பு இவற்றில் ஒரளவு உண்டு. அவ்வக்கால மக்கட்கும் ஓர் அருங்கருத்தை அளிக்கும் இயல்பும் இவற்றிற்கு உண்டு. எல்லாக் காலத்தும் வாழும் மக்கள் இனத்திற்கு வேண்டிய சில நல்ல பயன்களும் கருத்துக்களும் இவற்றில் இருக்கின்றன. உதாரணமாகச் சிலப்பு:திதிாரம் மூன்று பெருங் கருத்துக்களைப் புகட்டத் தோன்றிற்று இன்றும் அந்நூல் கூறிய கருத்துக்கள் உண்மை" யாகவே உள்ளன. இங்கனம் தனிப்பட்ட கருத்துக்களை உட்கொண்டு த்ோன்ற இலக்கியங்களும் உண்டு. பட்டினப் பர்ல்ல' iன்பதோர் இலக்கியம் உண்டு. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற கலைஞர் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை வருணித்துள்ளார் இந்நூலில். அவர் கூறிய அப்பட்டின்ம் இன்று இல்லை; கரிகாலன் இல்லை. அதில் குறிக்கிப்பெற்ற மக்களும் இல்லை. என்றாலும், பட்டினப்பாலை இருந்து இன்பமூட்டித்தான் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/90&oldid=751309" இலிருந்து மீள்விக்கப்பட்டது