பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


70 "முனித்தொண்டை மான்கையிற் சங்காழி நல்கி என்மூரல் செவ்வாய்க் கணித்தொண்டை மான்கையிற் சங்காழிகோடல் கருமம் அன்றே.' - (முரல்-புன்முறுவல்; கணித்தொண்டை-கோவைப் பழம்; சங்கு-வளையல்; ஆழி-மோதிரம்.) என்று மிக அருமையாகப் பாடியிருத்தல் கண்டு இன்புறத்தக்கது. வேங்கடம் முருகனுக்குரியது: அன்பர்களே, வேங்கடம் முருகனுக்குரியது; வைண வர்கள் முருகன் உருவத்தையே மாற்றித் திருமால் உருவமாக மாற்றிவிட்டார்கள் என்று கற்ருேர் களிடையே ஒரு பேச்சு நிலவிவருகின்றது. இக்கருத்தினை மறுத்து பூரீவேங்கடமுடையான்' என்ற தலைப்பில் தக்க சான்றுகளுடன் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள் ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளார். அதனை அன்பர்கள் பார்க்க வேண்டுகிறேன். ஆயினும், அதுபற்றி ஒருசில கருத்துக்களே இவண் தெரிவிக்க விழைகின்றேன். மூன்று காரணங்கள் : - திருவேங்கடமலை திருமாலுக்குரியதாகாது, அது முருகனுக்கே உரியது என்பார் கூறும் மூன்று காரணங் களே மட்டிலும் ஈண்டு ஆராய விரும்புகின்றேன். அவை: ! 17. திருவேங்கடத் தந்தாதி-53. 18. இராகவையங்கார், மு-ஆராய்ச்சித் தொகுதி-20 வ கட்டுரை (பார்க்க). ஆ - தாகுதி