பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


15? 'பொருதரங் கத்தும் வடத்தும் அனந்தபுரத் துமன்பர் கருதரங் கத்துங்துயில் வேங்கடவ! கண்பார்த் தருள்வாய் கிருதரங் கத்து நிறம்போல் வரும்அக்தி நேரத்தன்றில் ஒருதரங் கத்தும் பொழுதும் பொருள் என் ஒருவல்லியே.' (தரங்கம் - அலை; பொருதரங்கம்-திருப்பாற் கடல்; வடம்-ஆலிலை; அன்பர் கருதும் அரங்கம்-திருவரங்கம்; நிருதர் அங்கம்-அரக்கர் உடல்; அந்திநேரம் - மாலைக் காலம்; ஒருதரம் - ஒருமுறை; ஒருவல்லி - தனித்த பூங்கொடி போன்றவள்.) என்ற பாசுரத்தில் தலைவியின் நிலையைப் பேசுகின்ருள் தோழி. திருப்பாற்கடல், ஆலிலே, திருவனந்தபுரம், திரு வரங்கம் இந்த நான்கு இடங்களிலும் திருவேங்கடவனே கண் வளர்கின்ருன். இரவும் பகலும் ஓயாது ஒழியாது, பக்தர்கட்கு நின்ற நிலையிலேயே பேட்டி அளித்துச் சோர்வுற்ற எம்பெருமான் இந்த இடங்களில் சற்று ஒய்வு கொள்ளுகின்ருன் போலும்! இதுவும் அறிதுயி லேயன்றி ஆழ்ந்த உறக்கம் அன்று. அரக்கர் நிறம் போல் கறுத்துப் பயங்கரமாய் வருகின்ற அந்திமாலையில் அன்றில் பறவை ஒருதரம் கத்துகின்ற பொழுதேனும் த்லைவி தலைவனின் பிரிவைப் பொறுக்க முடியாதவளாக இருப்பதாகத் தோழி கூறுகின்ருள். அவள்மீது எம் பெருமானின் (தலைவனின்) திருக்கண் நோக்கையும் வேண்டி நிற்கின்ருள். முன்பொழிவில் அகப்பொருள் துறைகள் ஆழ்வார் பாசுரங்களில் அமைந்த அருமைப் பாட்டையும் தத்துவத்தையும் விளக்கினேன். அவற்றை --صم- سمسمسمسييN. 9ح نة سm tلس ، ii