உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 124 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு தொண்டு செய்யும் தவயோகி சுத்தா னந்த பாரதியும் மண்ட லத்தில் என்றென்றும் வாழ வரம்நீ வழங்குவையே. இவை தவிர இப்பெருமான் புத்தேரிக்கு வந்தபோது பாடிய மூன்று வெண்பாக்களும் உள்ளன. தவத்திரு அம்பலவாண தேசிகர். இவர் திருவாவடுதுறை மகா சந்நிதானம்; இவர் நாகர்கோவிலுக்கு எழுந்தருளி யிருந்த காலத்து (5.12.1950) அவர்களைத் தரிசித்தபோது வாழ்த்திப் பாடியவை மூன்று பாடல்கள். அந்தரத்து அம்புலியும் ஆடரவும் சூடாமல் கந்தரத்து வெவ்விடமும் காட்டாமல் வந்தருளும் அம்பல வாணன் அடிமலரைப் போற்றிநிதம் கும்பிடுநீ நெஞ்சே குழைந்து (1) இது தேசிகருக்கு வணக்கம் கூறுவது. அன்பால் எவரையும் தன்பா லாக்கும் ஆவடு துறைவாழ் அம்பல வாண! தேசிகா சிவனருட் செல்வா இன்றுன் பொன்னடி தொழுது போற்றிய புண்ணியம் ஐய மின்றி அருந்துணை யாகிப் பொய்யை அறவே போக்கி மெய்யை உணர்த்தி, மேல்வீடும் தருமே (2) இஃது அடிகளாரைக் கண்டதன் பயன் கூறுவது. சைவம் வளரத் தமிழ்வளரத் தருமம் ஓங்கித் தழைத்துவரப் பொய்னியப் போக்கி மெய்கண்ட புனித ஞானி யாமெங்கள்