பக்கம்:இலக்கியக் கலை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 . இலக்கியக் கலை ஒன்று உதிரிச் சூழ்ச்சி என்று கூறப்பெறும் இங்கு நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும் தம்முள் தொடர்புடையனவல்ல தொடர்பற்ற இச் சம்பவங்கள் புதினத்தின் தலைவன். அல்லது தலைவி என்ற ஒருவருக்கு நிகழ்வதாலேயே அவை இங்கு இடம் பெறுகின்றன. இதன்கண் தலைவனுக்கு நிகழும் இறுதி நிகழ்ச்சி முன்னர் நடைபெற்ற சிறு நிகழ்ச்சி களின் முத்தாய்ப்பு அன்று தருக்க முறைப்படி அவை இம் முடிபைத் தந்தன என்று கூறல் இயலாது. இத்தகைய நூலில் தனி நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகுடன் விளங்கினும் இவை அனைத்தும் சேர்த்துத் தருகிற முழுத் தன்மை ஒன்றும் இல்லை. இதற்கு மறுதலையாய் அமைந்தது 'ஒட்டுச் சூழ்ச்சிப் புதினம் என்பதாகும். இத்தகைய புதினத்தில் நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று ஒட்டி வருவதுடன் ஒன்றின் முடிபு மற்றொன்றாய்த் திகழும். இத்தகைய புதினம் இயற்று பவர்கள் தம் நூலை முற்றிலும் மனத்தில் வாங்கிக்கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க இடந்தந்து அமைப்பைச் செய்யவேண்டும். இதில் வருகிற பாத்திரங்கட்குக்கூடத் தக்க இடமும், தோன்றும் காலமும் அமைத்தல் வேண்டும். ஆனால், இத்தகைய ஒட்டுச் சூழ்ச்சிப் புதினத்தில் ஒரு இடைஞ்சல் உண்டு. எதிர்பாரா நிகழ்ச்சிகள் மிகுதியான இடத்தை இதிற் பெற்றுவிடும். எதிர்பாரா மனிதர்கள் எதிர்பாராத இடங்களில் வந்து புதிரைத் தீர்த்துவிட முனைவார்கள். எங்கோ ஓரிரு இடங்களில் இது நிகழின் சரி. கதையைக்கொண்டு செலுத்தவேண்டிய கடப்பாட் டிற்காக இதனை அதிகம் கையாண்டால் வெறுப்புத் தட்டிவிடும். இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் புதினங்களை இங்குக் குறிப்பிட்டாலும் நல்ல புதினங்கள் அனைத்தும் இவ் இரண்டு முறையையும் மேற்கொண்டுதான் நடை பெறும். இக்கொள்கைகட்கெல்லாம் உதாரணங்கள் தர. முடியுமாயினும் அவரவர் விருப்பு வெறுப்புக் காரணமாக அவை: அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. ஆகலின், உதாரணங்கள் தரப்படவில்லை. புதினங்களின் ஏனைய உறுப்புக்களை அடுத்துக் காண்போம். பாத்திரங்கள் - புதினத்தின் உறுப்புக்களில், அடுத்து நோக்கவேண்டியது பாத்திரங்களாகும். புதினத்தில் வரும் பாத்திரங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/371&oldid=751203" இலிருந்து மீள்விக்கப்பட்டது